states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஒடிசா விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு 

278 பேரின் உயிரைப் பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்து சம்ப வம் தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. தென்கிழக்கு வட்டார ரயில்வே பாது காப்பு ஆணையர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிஐ விசாரணைக்கு தனியாக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, இந்த ரயில் விபத்துச் சம்பவம் தொடர்பாக, கட்டாக் காவல் நிலையம், அடையாளம் தெரியாத நபர்கள் மீது  இந்திய தண்டனைச் சட்டம், 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியா தது) மற்றும் 34 (அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள்) ஆகிய பிரிவு களின் கீழும், ரயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 (பயணிகளின் பாது காப்புக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய பிரிவுகள் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உடலில் காயமோ, ரத்தமோ இல்லாமல்  40 பேர் மரணம்!

ஒடிசா ரயில் விபத்துச் சம்பவம் நடந்த இடத்தில், மீட்பு, புணரமைப்பு பணி கள் நிறைவடைந்து அங்கு மீண்டும் ரயில் சேவைகள் துவங்கியுள்ள நிலையில், இறந்தவர்களில் பலரின் உடல்கள் அடையாளம் காணமுடி யாத நிலையில் உள்ளன. அவற்றை ஒடிசா அரசு பதப்படுத்தி வைத்துள் ளது. இந்நிலையில், விபத்தில் சுமார் 40 பேரின் உடல்களில் எந்த காயங்களோ, ரத்தக் கறையோ இல்லாமல் மரணமடைந்துள்ளது விசா ரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கி  உயிரிழந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி தூக்கி வீசப்பட்ட போது, அவை தண்டவாளத்தின் மேல் செல்லும் மின் கம்பிகளில் உரசி மின்சாரம் பாய்ந்திருக்கும் என ரயில்வே  காவல் ஆய்வாளர் பாப்பு குமார் நாயக் தெரிவித்துள்ளார்.

101 உடல்களை அடையாளம் காண முடியாமல் அரசு திணறல்

“ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்த 278 பேரில் 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என்று கிழக்கு மத்திய  ரயில்வே-யின் கோட்ட ரயில்வே மேலாளர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள் ளார். “புவனேஸ்வரில் வைக்கப்பட்டுள்ள மொத்தம் 193 உடல்களில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 55 உடல்கள் உறவினர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட 1929 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு 200க்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இறந்த உடல்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்படும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே உடலுக்கு உரிமை கோரிய  2 குடும்பத்தினர்!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் ஜஹாங்கீர் (42), அஞ்ஜருல் (41) ஆகியோரும் அடங்குவர். இதில், ஜஹாங்கீரின் உடல் அழுகி, பல இடங்களில் காயத்துடன் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு இருந்தது. உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் உடலை  எடுத்துக் கொண்ட புவனேஸ்வர் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கைப்பேசியில் அழைத்த போலீசார், நீங்கள் கொண்டுசெல்லும் உடலுக்கு  வேறொரு குடும்பமும் உரிமை கோருவதாக கூறி, தடுத்து நிறுத்தியுள்ள னர். பின்னர், தவறாகக் கூறிவிட்டோம்; நீங்கள் தொடர்ந்து செல்லலாம் என்று அனுப்பி வைத்துள்ளனர். ஜஹாங்கீரும், அஞ்ஜருலும் ஒரே  விதமான ஆடை அணிந்திருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணமாகி யுள்ளது.

உடலை அடையாளம் காண மரபணு சோதனை!

ஒடிசா ரயில் விபத்தில் பலியானோரில், 101 பேரின் உடல்கள் அடையா ளம் காணப்படவில்லை. தெளிவாக அடையாளம் காண முடியாத நிலையில், ஒரே உடலுக்கு பல குடும்பங்கள் உரிமை கோரும் நிகழ்வு கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் இறந்த வர்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளவர்களின் உடல்கள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 193 உடல்களில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒடிசா மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

7 பேரின் உடலுக்கு கீழே சிக்கிய தம்பியை காப்பாற்றிய அண்ணன்

ஒடிசா மாநிலம் போக்ராய் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேபே சிஷ் பத்ரா. இவர், தனது தாய், தந்தை, அண்ணனுடன் பத்ராக் பகுதியி லுள்ள தனது மாமா வீட்டிற்கு செல்வதற்காக, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது, கடந்த ஜூன் 2 அன்று விபத்தில் சிக்கி, மயக்கம் அடைந்துள்ளார். கண்விழித்துப் பார்த்தபோது, சிறுவன் மீது, 7 பேரின் உடல்கள் கிடந்துள்ளன. அவர்களின் சுமை தாங்க முடியாமல் மூச்சுத் திண றிய சிறுவனை, நல்வாய்ப்பாக அவரது அண்ணன் சுபாஷிஷ் கண்டு பிடித்துக் காப்பாற்றியுள்ளார்.

ரயில் விபத்திற்கு திரிணாமுலே காரணம்: பழிபோட்ட பாஜக

ஒடிசா விபத்து, திரிணாமுல் காங்கிரசின் சதி என்று மேற்குவங்க மாநில  பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி பழிபோட்டுள்ளார். “ஒடிசா ரயில்  விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி. வேறு மாநிலத்தில் விபத்து நடந்தி ருக்கும்போது, நேற்றிலிருந்து அவர்கள் ஏன் அதிக அளவில் பீதி அடைந்  துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு ஏன் பயப்படுகிறார்கள்? போலீஸ் உதவி யுடன் ரயில்வே அதிகாரிகளின் போன் உரையாடலை ஒட்டுக் கேட்டுள்ள னர். இரண்டு அதிகாரிகளின் போன் உரையாடல் இவர்களுக்கு எப்படி  தெரிந்தது. எப்படி உரையாடல் கசிந்தது. இது சிபிஐ விசாரணையில்  வரவேண்டும். இது வரவில்லை என்றால், நான் நீதிமன்றம் செல்வேன்” என்று சுவேந்து அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணம் மட்டும் போதுமா;  அரசு வேலை எங்கே?

“நான் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒடிசா ரயில் விபத்து போன்ற சம்பவங்களில் இறந்தவர்கள் குடும்பங்க ளுக்கு உதவும் நோக்கில் அவர்கள் குடும்பத்தில் ஒருவரை அரசு பணி யில் அமர்த்த உத்தரவிட்டிருந்தேன். தற்போது பிரதமர் மோடி அரசு நிவா ரணம் மட்டுமே அளித்துள்ளது. தனியாக சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் ஒன்றாக இணைத்தபோதே ரயில்வே துறை நாசமடையத் துவங்கி விட்டது. எனவே, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மட்டும் பதவியை ராஜினாமா செய்ய நாம் வற்புறுத்தவில்லை. மாறாக, இந்த ஒன்றிய அரசையே மக்கள் தேர்தலில் புறக்கணித்து முடிவிற்கு கொண்டுவர வேண்டும்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அரசு விரைவு பேருந்துகளில் தனியார் விளம்பரம் செய்யலாம்

சென்னை, ஜூன் 6- அரசு விரைவு பேருந்துகளில், தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதால், மாதந் தோறும் ரூ. 30 லட்சம் கிடைக்கும்  என  அரசு போக்குவரத்து கழக அதிகாரி கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: கட்டண உயர்வு இன்றி, முதலீடு கள் இன்றி, வருவாய் பெறும் வகையில்,  அரசு பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க உள்ளோம். தற்போது, சென்னை மாநகர பேருந்துகளில் செய்யப் பட்டுள்ள விளம்பரங்களால் மாதம் 1  கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. அடுத்த கட்டமாக, 250 விரைவு பேருந்துகளில், பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்ய, தனியார் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். விரைவில், இதற்கான ஒப்பந்தம் செய்ய உள் ளோம். இதன் மூலமாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, மாதந் தோறும், 30 லட்சம் ரூபாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சூரிய ஒளியில் இயங்கும் நவீன பேருந்து நிழற்கூடம்

தருமபுரி, ஜூன் 6- தருமபுரி தொகுதி மக்களவை திமுக  உறுப்பினர் செந்தில்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.58 லட்சத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும், நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடத்தை செந்தில் குமார் எம்பி முன்னிலையில், மாவட்ட  ஆட்சியர் சாந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிழற்கூடத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இரண்ட டுக்கு தளத்தில் இருக்கை வசதி,  தானியங்கி பரிவர்த்தனை எந்திரம்,  ஏடிஎம் மையம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, 24 மணி நேரமும் இலவச வைஃபை வசதியும் உள்ளது. மேலும், அதிநவீன வர்த்தக விளம் பர எல்இடி பலகை, குளிர்சாதன பாதுகாக்கப்பட்ட தாய் சேய் பாலூட்டு அறை, மினி நூலக வசதி, அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்த வாச கங்கள், தருமபுரி பண்பலை வானொ லியை கேட்கும் வசதி, தொலைக் காட்சி பெட்டி, செல்பி பாயிண்ட். கார்டன் சீட் அவுட் மற்றும் செல்  சார்ஜிங் பாயிண்ட் இவை அனைத்தும்,  அதிநவீன நிழற்கூடத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

மிகவும் மாசுபட்ட நகரங்கள்

புதுதில்லி, ஜூன் 6 - ஐகியூஏர் (IQAir) நிறுவனம் வெளி யிட்ட உலகின் மிகவும்  மாசுபட்ட முதல் 20 நகரங்களின் பட்டியலில் 14 இந்திய  நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பிவாண்டி, தில்லி, தர்பங்கா, அசோபூர்,  பாட்னா, காஸியாபாத்,  தருஹேரா, சாப்ரா,  முசாபர்நகர், கிரேட்டர் நொய்டா, பகதூர்கர், பரிதாபாத், முசாபர்பூர் ஆகிய நகரங்கள் முதல் 20 இடங்களில் உள்ள இந்திய நகரங்கள் ஆகும். பாகிஸ்தானின் லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. 

நாய் இறைச்சி : தடை ரத்து

கோஹிமா, ஜூன் 6 - நாகாலாந்தில் உள்ள உணவகங் களில், சந்தைகளில் நாய் இறைச்சியை விற்பனை செய்வதற்கு விதிக்கப் பட்டிருந்த தடையை கவுகாத்தி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2020இல் அம்மாநில அமைச்சரவையால் தடை  விதிக்கப்பட்ட நிலையில், உணவுப் பாது காப்புச் சட்டத்தை  அரசு  தவறாகப் புரிந்து கொண்டதாக வணிகர்கள் மனு தாக்கல் செய்த மனுவில், கவுகாத்தி உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வங்கதேசத்தில் கடும் வெயில்

டாக்கா, ஜூன் 6 - வங்கதேசத்தில் முன்னெப்பொழு தும் இல்லாத வகையில் வெயில் கொளுத்தி வருவதால் நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை  அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. வெயில் தணியவில்லை என்றால் இன் னும் இரண்டு வாரங்களுக்குள் தீவிர மின் வெட்டை எதிர்கொள்ளக்கூடும் என்று வங்கதேச எரிசக்தி  அமைச்சர் நஸ்ருல்  ஹமீட் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



 

 

;