states

img

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு

எதிர்க்கட்சிகள்  கடும் கண்டனம்

புதுதில்லி, மார்ச் 24 - பிரதமர் மோடி குறித்து, ராகுல் காந்தி தெரி வித்த கருத்துக்காக, அவருக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த பின்னணியில், ராகுல் காந்தியின் எம்.பி.  பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு  மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள்  மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் வெளி யிட்டுள்ளது. அதில், “சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கேரளா மாநிலம் வய நாடு தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கி உள்ளது. இந்த தண்டனை அடிப்படையில் மக்களவையில் இரு ந்து 2023 மார்ச் 23 முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8-ன்  படி 102(1)(e) அடிப்படையில் எடுக்கப்பட்டுள் ளது. ராகுல் காந்தியின் இந்த தகுதி நீக்கம், தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அம லுக்கு வந்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவைச் செயலாளர் (பொது) உத்வால் குமார் சிங் மற்றும் இணைச்  செயலாளர் திரிபாதி ஆகியோர் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளனர்.

ராகுல் காந்தி மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளர், பிரதமரின் செயலாளர், மாநிலங் களவைச் செயலாளர், இந்திய தேர்தல் ஆணை யம், அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளுக் கும் இந்த உத்தரவு நகல் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.  இதில் ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத் தில், ராகுல் காந்தியை முன்னாள் எம்.பி.  என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மோடி அரசின் இந்த பழிவாங்கல் நட வடிக்கை நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  2019 மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2019  ஏப்ரல்  13 அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்துத் திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார். 

ராகுலின் இந்தப் பேச்சு, பிரதமர்  நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக எம்எல்ஏ-வும் குஜராத் முன் னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2023 மார்ச் 23 அன்று தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி  எச்.எச். வர்மா, இந்திய தண்டனை சட்டப் பிரிவு  504-இன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார். இந்த  வழக்கின் தீர்ப்பு அடிப்படையிலேயே, மோடி  அரசானது, ராகுல் காந்தியின் எம்.பி. பத வியை பறித்துள்ளது.

காலையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி

முன்னதாக ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை யன்று காலை நாடாளுமன்றம் சென்றார். அதானி விவகாரத்தில் மோடி அரசை விமர்சித்தும், இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் ஆற்றிய உரை பற்றியும் விளக்கம் அளிக்க அனுமதி கோரினார். ஆனால், அவருக்கு பேச  அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து  ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. அதன்பின்னர் பிற்பகலில் அவை கூடுவதற்கு முன்னதாகவே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு விட்டதாக அறிவித்து, அவர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே  நுழைய முடியாத வகையில் மோடி  அரசு தனது பழிவாங்கலை அரங்கேற்றி யது.

8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது?

சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உடனடியாக ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய் யப்படுவதோடு, தீர்ப்புக்கு தடை வாங்க  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறில்லாத பட்சத்தில், தற்போது  52 வயதாகும் ராகுல் காந்தி 2 ஆண்டு தண்டனைக் காலம் மட்டுமன்றி, அதற்கடுத்த அடுத்த 6 ஆண்டுகள் வரை, ஒட்டுமொத்தமாக 8 ஆண்டு களுக்கு 2034-ஆம் ஆண்டுவரை தேர்த லில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘யுத்தம் தொடர்கிறது...’ என காங்கிரஸ் அறிவிப்பு

அதற்கேற்ப, காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தில் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை துவங்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அதி காரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, “ஜனநாயகத்தைப் பாதுகாக்க ராகுல் காந்தி தொடர்ந்து போராடு வார். இந்த விவகாரத்தில் உரிய நட வடிக்கையை எடுப்பார்” என்று கூறி யுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘யுத்தம் தொடர்கிறது’ என்றும் தலைப் பிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களும், பலர்  மோடி அரசை கடுமையாக விமர் சித்துள்ளனர். “இதை நாங்கள் சட்ட  ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். அதானி விவ காரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ராகுல்  காந்தியை தகுதி நீக்கம் செய்திருக்கி ன்றனர். இந்திய ஜனநாயகம் சாந்தி யடையட்டும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காட்ட மாக பதிவிட்டுள்ளார். “ராகுல் காந்திக்கு எதிரான நட வடிக்கையில் காட்டப்பட்ட வேகம் என்னை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு வந்த 24மணி நேரத் திற்குள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது அதிகாரத்திற்கு போட்டிபோடும் அரசியல். ஜனநாயகத்திற்கு இத்த கைய அரசியல் மிகவும் கேடானது” என்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சசி தரூர் சாடியுள்ளார். “மக்களவை உறுப்பினர் பதவியி லிருந்து ராகுல் காந்தியை தகுதி  நீக்கம் செய்திருப்பது சர்வாதிகாரம். இதேபோன்றதொரு அணுகுமுறை யைத்தான் இந்திரா காந்தியிடமும் பாஜக காட்டியது. பின்னர் விளைவு களை சந்தித்தது. ராகுல் காந்தி இந்த தேசத்தின் குரல். அந்தக் குரல் இனி  இன்னமும் ஓங்கி ஒலிக்கும். இங்கே  நிலவும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஓங்கி ஒலிக்கும்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆவே சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்

இதேபோலவே, நாடு முழுவது முள்ள எதிர்க்கட்சித் தலைவர்களும், ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதி ராக கண்டனம் முழங்கியுள்ளனர்.

சூரத் மாவட்ட நீதிமன்றமானது, ராகுல் காந்திக்கு விதித்துள்ள தண்ட னையை, அவர் மேல்முறையீடு செய்வ தற்கு ஏதுவாக ஒருமாதம் நிறுத்தி  வைத்துள்ளது. ஜாமீனும் வழங்கி யுள்ளது. அவ்வாறிருக்கையில், மோடி அரசானது, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை, மக்களவைச் செயலகம் மூலமாக அவசர அவசரமாக பறித்துள் ளது அரசியல் ரீதியிலான உள்நோக் கம் கொண்டது; ராகுல் காந்தி இனி நாடா ளுமன்றத்திற்குள் நுழையவே கூடாது என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே பதவி பறிப்பு நடவடிக்கை அமைந்துள் ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

“எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய பாஜக இப்போது குற்றவியல் அவதூறு வழியைப் பயன்படுத்து கிறது. இது கண்டிக்கத்தக்கது. இது  சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற வற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சி களைப் பழிவாங்கும் நடவடிக்கை களையும் தாண்டிய தாக்குதல் ஆகும். இத்தகைய எதேச்சாதிகார தாக்கு தல்களை எதிர்த்து முறியடிப்போம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவசேனா

“திருடரை திருடர் என்றழைப்பது நம் நாட்டில் கிரிமினல் குற்றமாக இருக்கிறது. ஆனால், உண்மையான திருடர்களும், கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாகத்தான் இருக் கின்றனர். ராகுல் காந்திதான் தண்டிக் கப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்தின் மீதான நேரடி படுகொலை. இங்கே அனைத்து அரசு இயந்திரங்களும் அழுத்தத்தில் இருக்கின்றன. இதுதான் சர்வாதிகாரத்தின் முடிவுக்கான தொடக்கம். இந்த யுத்தத்திற்கு ஒரு சரி யான திசை மட்டும் கொடுக்கப்பட வேண்டும்” என்று சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) கட்சித் தலை வர் உத்தவ் தாக்கரே தனது பேட்டி யில் கடுமையாக சாடியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி

“எதிர்க்கட்சிகளின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்கினால் யார்தான் மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் பேசுவது? சின்னச் சின்ன பிரச்சனை களுக்காக எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். இதுவே தொடர்ந்தால் பிரதமர் மோடியும், பாஜக-வினரும் மட்டுமே தான் எல்லா தேர்தலிலும் போட்டியிட வேண்டி யிருக்கும். இது சர்வாதிகாரம்” என்று  ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலை வரும், தில்லி அமைச்சருமான சுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதாதளம்

“ராகுல் காந்தி பதவி பறிப்பு வெட்கக் கேடானது மட்டுமன்றி துரதிர்ஷ்டவச மானது. இதைவிட நாடாளுமன்ற ஜன நாயக வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி இருக்க முடியாது” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

“பிரதமர் நரேந்திர மோடியின் புதிய  இந்தியாவில் எதிர்க்கட்சித் தலை வர்கள்தான் முதன்மையான இலக்கு களாகியுள்ளனர்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.




 

 

 

;