states

அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக இளைஞர், மாணவர் சார்பில் ஜூலை 4-ல் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 27- அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி இளைஞர் - மாணவர் அமைப்புகளின் சார்பில் ஜூலை  4-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைப்புகளின் கூட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இடதுசாரி இளைஞர் - மாணவர் அமைப்புகளின் கூட்டு கூட்டம் ஜூன் 26 அன்று இணையதளம் வழியாக நடை பெற்றது. கூட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெரு மன்ற மாநிலச் செயலாளர் க.பாரதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலத் தலைவர் ரெஜிஸ் குமார், மாநிலச் இணைச் செயலாளர் பாலசந்திரபோஸ், மாநிலச் செயற் குழு உறுப்பினர் செல்வராஜ், மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் சீ.தினேஷ், மாநில தலைவர் மெள.ஞான சேகர், இளைஞர் லீக் அகில இந்திய தலைவர் கே.சுப்பு ராஜ், மாநிலத் தலைவர் சுரேஷ், மாணவர் பிளாக் அகில  இந்திய தலைவர் டாலர் இனியவன், மாநிலத் தலைவர் ராயன் குமார், செயலாளர் பாஸ்கர பாண்டியன், ஜனநாயக மாணவர் சங்க மாநில செயலாளர் சுகுபாலா, ஜனநாயக இளைஞர் சங்க மாநில செயலாளர் சுருளியாண்டவர், இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இடதுசாரி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகளின் கூட்டு கூட்டம் தில்லியில் ஜூன் 23 அன்று நடைபெற்றது. இந்திய ராணுவத்தில் அக்னி பாதை  திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக பணியாற்றிட ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் முடிவு செய்து உள்ளது. இத்திட்டம் நாட்டின் பாதுகாப்பையும்,

ராணுவ  கட்டமைப்பையும் சீர்குலைவு செய்யும் மோசடித்தனமானது.  நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பிறகு சில முன்னுரிமை களையும், தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் அடிப்படையான மாற்றம் இல்லை. எனவே, அக்னிபாதை திட்டத்தை முழுமை யாக திரும்பப்பெற கோரி தேசம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடத்துவது என்று திட்டமிடப் பட்டது. தமிழகம் முழுவதும் இப்போராட்டத்தை ஜூலை 4  ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்ட மாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள இடதுசாரி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகளின் கூட்டு கூட்டத்தை கூட்டி உரிய தயாரிப்போடு இந்த போராட்டத் தை வெற்றிகரமாக்க வேண்டும். ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், அகில  இந்திய இளைஞர் லீக், அகில இந்திய மாணவர் பிளாக், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்கவுள்ளன.

;