states

‘பரம்வீர் சக்ரா விருது’ பெற்ற முன்னாள் கேப்டனை மிரட்டி பணியவைத்த இந்துத்துவா கூட்டம்!

புதுதில்லி, ஜூன் 25 - ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மிக  உயரிய விருதான ‘பரம்வீர் சக்ரா’ விருது  பெற்ற ஓய்வுபெற்ற ராணுவக் கேப்டன்  பாணா சிங், இந்துத்துவா கூட்டத்தால் மிரட்  டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அவர்களின் மிரட்டல் காரணமாக ‘அக்னி பாதை’ திட்டம் தொடர்பாக பதிவிட்டி ருந்த கருத்தை கேப்டன் பாணா சிங் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். ராணுவத்தில் தரைப்படை, கடற்படை, விமானப் படை (Army, Navy, Air Force)  ஆகிய மூன்று படைப் பிரிவுகளிலும், 17.5  முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ளை ‘நான்காண்டு காண்ட்ராக்ட்’ அடிப் படையில் பணிநியமனம் செய்யும் ‘அக்னி பாதை’ (‘Agnipath’ Recruitment Scheme) என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு ராணுவப் பணிக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மட்டுமன்றி,  ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி களும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். எனினும், விமானப்படையில் அக்னி பாதைத் திட்டத்தின் கீழ் ஆளெடுக்கும் பணியை பிடிவாதமாக மோடி அரசு துவங்கி யுள்ளது.

இதனிடையே, ‘அக்னி பாதை’ திட்டத் திற்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்  திற்காக, ஓய்வுபெற்ற ராணுவக் கேப்டனும்,  ‘பரம்வீர் சக்ரா விருது’ பெற்றவருமான பாணா சிங்கை, இந்துத்துவா கூட்டம் மிரட்டி யது நடந்துள்ளது. 1987-ஆம் ஆண்டு சியாச்சினில் பாகிஸ்  தான் ராணுவத்தின் வசமிருந்த முக்கிய பகு தியை மீண்டும் கைப்பற்றியதில் முக்கிய  பங்காற்றியவர் கேப்டன் பாணா சிங் (ஓய்வு). அப்போது அவரது துணிச்சல்மிக்க நடவடிக்  கைக்காக ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கி கவு ரவிக்கப்பட்டார்.  இவ்வாறு நாட்டிற்காக பெரும் சேவை யாற்றிய பாணா சிங், அக்னிபாதை திட்டம்  குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி யிருந்தார். “நாட்டைக் காப்பாற்றுங்கள், அக்னி பாதை திட்டம் நம்மை மோசமாக பாதிக்கும்.  இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் செல்  கிறது. நமது தாய்நாட்டின் எதிர்காலமே  இளைஞர்கள்தான்” என்று குறிப்பிட்டிருந்தார். “அக்னிபாதை திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு அதிக விவாதம் நடந்தி ருக்க வேண்டும். அனைத்து தரப்பினருட னும் கலந்து ஆலோசிக்காமல், இத்தகைய பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதில் அர்த்தமில்லை” என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்துத்துவா கூட்டம், கேப்டன் பாணா சிங்கை, அவர் நாட்டின் மிக உயரிய ‘பரம்வீர் சக்ரா’ விருது  பெற்றவர் என்பதையெல்லாம் மறந்து விட்டு அவரை டுவிட்டரில் தரம்குறைந்த வார்த்தைகளால் அவமானப்படுத்த துவங்கி னர். அவதூறுகளை அள்ளி வீசினர். இத னால் பாணா சிங் அதிர்ச்சி அடைந்தார். பாகிஸ்தானுடன் சண்டை போட்ட அவ ரால், பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்களு டன் சண்டை போட முடியவில்லை. ஒரு கட்டத்தில், அவரது கருத்துக்களை அவரா கவே டுவிட்டரிலிருந்து நீக்கிவிட்டு அவர்களி டமிருந்து தப்பினால் போதும் என்று ஒதுங்  கிக் கொண்டுள்ளார். டுவிட்டர் பதிவை நீக்கியது பற்றி கேட்ட தற்கு, “அது ரத்து செய்யப்பட்டதாக கருதுங்  கள். நான் செய்ய வேண்டியதைச் சொல்லி விட்டேன்” என்று விரக்தியுடன் பதிலளித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி, லெப்டி னன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா, லெப்டி னன்ட் ஜெனரலான வினோத் பாட்டியா,  லெப்டினண்ட் ஜெனரல் பி.ஆர். சங்கர் ஆகி யோரும் ஏற்கெனவே அக்னிபாதை  திட்டத்  திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் குறிப்பி டத்தக்கது.

;