states

பிளஸ் டூ உயிரியல் - விலங்கியல் தேர்வு முழு மதிப்பெண் வழங்கப்படுமா?

திருப்பூர், ஜூன் 12- தமிழக அரசு பிளஸ் டூ பொதுத் தேர்வில் குறைக்கப்  பட்ட பாடப் பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதால், மாணவர்களுக்கு மதிப்பெண் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதிக்கு வழங்க வேண்டிய  இரு மதிப்பெண்களை முழுமையாக வழங்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். 12-ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்விற்கான உயிரியல் - விலங்கியல் விடைக் குறிப்பில் வினா எண்  11க்கான விடைக்குறிப்பு, குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலி ருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5.8.2 என்ற பகுதியே தேர்விற்கு கிடையாது. இதனால் இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக ஒரு மதிப்பெண் மட்டுமே வழங்க முடிந்தது. நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களுக்கு இதனால் ஒரு மதிப்பெண் வழங்க முடியவில்லை என்று விடைத்தாள்  திருத்திய ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனவே கல்வித் துறை முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாண வர்கள் எதிர்பார்க்கின்றனர்.