states

காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை மக்கள் நலன் கருதி நிரப்ப வேண்டும்

கரூர், மே 22- தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.  கூட்டத்தில் மாநில பொது செயலாளர் உ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் காலியாக உள்ள 1,200க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை மக்  கள் நலன் கருதி நிரப்ப வேண்டும். தொலை தூர மருத்துவத் திட்டம் மற்றும் மக்களை  தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்தாளு நர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பலமுறை மனு அளிக்கப்  பட்டது. ஆனால் இன்று வரை அந்த கோப்பு கள் நிலுவையில் உள்ளது.  எனவே இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூன் 24-ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெறவுள்ளது. தமிழக அரசு கோரிக்கை களை நிறைவேற்றத் தவறினால், அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை குறித்து ஆலோ சித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.