states

‘முதலாளிக்களுக்காக ஆட்சி நடத்திய பாஜகவுக்கு மக்கள் கொடுத்த பதிலடி’

பெங்களூரு, மே 13- கர்நாடகத்தில் பாஜக அடைந்துள்ள தோல்வி குறித்து தலைவர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதில், முதலாளிக்களுக்காக ஆட்சி நடத்தும் பாஜக-வுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், “கர்நாடக தேர்தலை காங்கிரஸ் கட்சி வெறுப்பு ணர்வுடன் அல்ல, அன்பால் எதிர்கொண்டது. கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜக வுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள் ளனர். இந்தநிலை அனைத்து மாநிலங்களில் தொ டரும். கர்நாடகா தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றிபெற்றுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார். “கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்து கள். பாஜக-வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி கர்நாடக மக்கள் தங்களின் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலு மாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத் தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றி ணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்க ளாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களை யும் மீட்போம்” என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருமுதலாளிகளுக்கு பாதுகாப்பாக இருந்த பாஜக ஆட்சி கர்நாடகாவில் அகற்றப்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா கூறியுள்ளார். “பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்ற மாயையை உருவாக்க முயன்றனர். ஆனால், பாஜக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை கர்நாடக மக்கள் தங்கள் தீர்ப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகத்தில் சர்வாதிகார அரசியல் தோற் கடிக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.