states

அடுத்த தாக்குதலுக்கு தயாரானது ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம்

புதுதில்லி, மார்ச் 23- விரைவில் புதிய அறிக்கை ஒன்று வெளி யாக இருப்பதாகவும், இப்புதிய அறிக்கையும் மிகப்பெரிய விவகாரம்தான் என்றும், அறி விப்பு வெளியிட்டு ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம், கார்ப்ப ரேட் வட்டாரத்தை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில் புதிய ஆய்வறிக்கை வெளியாக இருக்கிறது. இது வும் மற்றொரு பெரிய விஷயம்தான்” என்று  தெரிவித்துள்ளது. எனினும், எந்த நிறுவனம் பற்றிய ஆய்வ றிக்கையை வெளியிடப் போகிறோம் என்று  ‘ஹிண்டன்பர்க்’ கூறாத நிலையில், இந்த  ஆய்வறிக்கையும் அதானி தொடர்பானதா கவே இருக்கும் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) என்ற ஆய்வு  நிறுவனம், அண்மையில் அதானி குழுமத்தின்  ஊழல் முறைகேடுகள் குறித்து 106 பக்க ஆய்வ றிக்கை ஒன்றை, கடந்த ஜனவரி 24 அன்று வெளி யிட்டது.

அதில், “கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்த நிலையில், இந்த வளர்ச்சி நேர்மையானது அல்ல; அதானி குழும நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பை மோசடியாக உயர்த்திக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றி வருகின்றன; மேலும் இந்த பங்கு மதிப்பைக் காட்டியே அதன்மூலம் மிக அதிக  அளவில் கடன் பெற்றுள்ளன. கரீபியன் நாடு கள், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மூலம் வெளிநாடுகளில் போலி  நிறுவனங்களைத் தொடங்கி வரவு, செலவு கணக்குகளில் மோசடி செய்ததோடு வரி  ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றத்தி லும் ஈடுபட்டுள்ளன; இந்த வகையில், அதானி  குழும நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்த கத்தில் ரூ. 17 லட்சத்து  80 ஆயிரம் கோடி அள விற்கு ஊழல் செய்துள்ளன” என்று குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை, உலக பங்குச் சந்தை முத லீட்டாளர்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தி யது. அவர்கள் அதானி குழும பங்குகளில் தாங்கள்  செய்துள்ள முதலீடுகளை எடுத்துக்  கொண்டு வேகவேகமாக ஓட ஆரம்பித்தனர். இதனால் பங்குச் சந்தையில் அதானி குழு மத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் பங்குகள்  கடும் அடிவாங்கின. இந்த ஆண்டின் துவக்கத்தில், அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 19 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த  நிலையில், கடந்த 3 மாதத்தில் சுமார் 6 லட்சத்து  56 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்தது. சுமார் 13  லட்சம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித் தது.

2022 டிசம்பரில் ரூ. 12 லட்சத்து 40 ஆயி ரத்து 353 கோடியாக இருந்த கவுதம் அதானி யின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 3 லட்சத்து  96 ஆயிரத்து 880 கோடியாக குறைந்துள் ளது. 2022-23 நிதியாண்டில் மட்டும் அதானி யின் சொத்து மதிப்பு 60 சதவிகிதம் சரிவடைந்  துள்ளது. ஒவ்வொரு வாரமும் ரூ. 3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.  உலகின் பெரும்பணக்காரர் வரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த அதானி தற்போது 23 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி குழுமம் மூலம் பங்குச் சந்தை முத லீட்டாளர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந் தித்துள்ள நிலையில், அவர்களின் நலனைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என பொதுநல வழக்கு கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசா ரித்த உச்ச நீதிமன்றம், அதானி குழும நிறுவ னங்களுக்கு எதிரான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’  அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு களை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்கு மாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI), கடந்த மார்ச் 2 அன்று  உத்தரவு பிறப்பித்தது. எனினும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதன் மூலமே, இவ்விவகாரத்தில் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும் என்று கூறி,

இந்திய எதிர்க்கட்சி கள், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்  தொடரின் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை  தொடர்ந்து போராடி வருகின்றன. கூட்டுக்குழு விசாரணைக்கு, மோடி அரசு பிடிவாதமாக மறுப்பதால், நாடாளுமன்றம் செயல்பட முடி யாத அளவிற்கு அதானி விவகாரம் நாளுக்கு  நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மறுபுறத்தில் அதானி குழுமமானது, முத லீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவ தற்காக கடன்களை அடைத்தும், முதலீட்டா ளர்களை கவர்வதற்காக  ஹாங்காங், சிங்கப்  பூர், லண்டன், துபாய் என உலகம் முழுவதும்  நிதி நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் வேலையில் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில்தான், ஹிண்டன்பர்க் நிறு வனம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில், “விரைவில் புதிய ஆய்வறிக்கை வெளி யாக இருக்கிறது. இதுவும் மற்றொரு பெரிய  விஷயம்தான்” என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;