states

ஆண்டுக்கு 500 ரேசன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள்

சென்னை,ஏப்.20- ரேசன் கடைகளுக்கு ஆண்டுக்கு 500 கடைகள் வீதம் சொந்தமாக கட்டிடம் கட்டு வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். சட்டப்பேரவையில் புதன்கிழமை (ஏப்.20) கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த  கூட்டுறவு துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி,“தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்போது பகுதி நேரமாக செயல்படும் 700 கடைகளும் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி  500 கடைகள் வீதம் கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.