புதுதில்லி, செப். 4 - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லி யில் புதன் மற்றும் வியாழக்கிழ மைகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 4 அடுக்கு ஜிஎஸ்டி முறையில் 12 சதவிகிதம், 28 சதவிகிதம் ஆகிய விகிதங்களை நீக்கி விட்டு, 5 சதவிகிதம், 18 சத விகிதம் ஆகிய 2 விகித நடைமுறையைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்து, அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்பட்ட பொருட்கள் இதன்படி வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்க ளுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவிகித வரி அடுக்கிற்குள் கொண்டு வரப்படுள்ளது. ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட் களுக்கான ஜிஎஸ்டி 18 சதவிகி தத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குழந்தை களுக்கான பால் புட்டி, நாப்கின். மருத்துவ டயப்பர்களுக்கான ஜிஎஸ்டியும் 12 சதவிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்ப ட்டுள்ளது. வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியும் 12 சதவிகிதத்தி லிருந்து 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அதே போல ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12 சதவிகிதமாக இருந்த வரி பூஜ்ஜிய மாக குறைக்கப்பட்டுள்ளது. பால், ரொட்டி, சப்பாத்தி, மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருட்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி யும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. வரி உயர்த்தப்பட்ட பொருட்கள் சிகரெட், பான்மசாலா, கார்ப னேற்ற குளிர்பானங்களுக்கு 28 சத விகிதமாக இருந்த வரி, 40 சத விகிதமாக உயர்த்தப்பட்டு சிறப்பு வரிப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருகிறது.