சென்னை, செப். 9 - திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த வர் சின்னத்துரை (17). பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை, உடன் படிக்கும் சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த மாண வர்கள், கடந்த ஆகஸ்ட் 9 அன்று, வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற சின்னத்துரை யின் சகோதரி- 9-ஆம் வகுப்பு படிக்கும் சந்திர செல்வி யையும் அவர்கள் வெட்டினர். இதில் படுகாயமடைந்த சின்னத்துரையும் அவரது சகோதரியும் திருநெல்வேலி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். பலகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு இப்போது அவர்கள் உடல்நலம் தேறி வருகின்ற னர். இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.