states

முக்கனி மேம்பாட்டு சிறப்புத் திட்டம்

முக்கனி மேம்பாட்டு  சிறப்புத் திட்டம் சென்னை, பிப். 20- முக்கனி மேம்பாட்டுக் கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தென்னாட்டு மா ரகங்கள், ஏற்றுமதிக்கு உகந்த LDIT ரகங்கள் பரப்பினை விரிவாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க மானியம் வழங்கவும், கிளை மேலாண்மை பயிற் சியளிக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான செயல் விளக்கத்திடல்கள் அமைக்கவும் ரூ. 27.48 கோடி நிதி ஒதுக்கீடு. ரூ. 12.73 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாழை பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடு த்தல் மேற்கொள்ள மானி யம், வாழைத்தார் உறை கள் வழங்க மானியம். உள்ளூர், புதிய ரகங்க ளின் சாகுபடி, சாகுபடித் தொழிநுட்பங்கள் குறித்து பயிற்சி, பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ. 1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.