states

உலகில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 3-ஆவது இடத்தில் இந்தியா!

புதுதில்லி, ஏப்.27- ராணுவத்துக்கான செலவுகளை மேற் கொள்வதில் உலகிலேயே இந்தியா மூன்றா வது இடத்தில் இருக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமை தலை மையிடமாகக் கொண்டு ‘சர்வதேச அமைதி ஆய்வு மையம்’ (SIPRI) செயல்பட்டு வரு கிறது. இந்த நிறுவனம்தான் உலக நாடுகள் ராணுவத்திற்கு செலவிடும் தொகை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2021-ஆம் ஆண்டில் உலகின் ஒட்டுமொத்த ராணுவச் செலவுகள் 2.1 டிரில்லி யன் டாலர் (சுமார் 150 லட்சம் கோடி ரூபாய்) அளவை எட்டியுள்ளதாகவும், இது, இதுவரை கண்டிராத உச்சபட்ச செலவு என்றும் கூறி யுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் ராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன என்றும் ‘சர்வதேச அமைதி ஆய்வு மையம்’ தெரிவித்துள்ளது.

2021-ஆம் ஆண்டில் சீனா அந்நாட்டு பாது காப்புத் துறைக்கு ரூ. 22 லட்சம் கோடியே 43 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.7 சத விகிதம் கூடுதலாகும். 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 72 சதவிகிதம் கூடுதலாகும். அதுபோல, இந்தியாவும் ராணுவத் துக்கான செலவினத்தை 2021-ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சத்து 86 ஆயிரம் கோடியாக அதி கரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.9 சதவிகிதம் கூடுதலாகும். 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 33 சதவிகிதம் கூடுதலாகும். ராணுவச் செலவினத்தில் உலகில் முத லிடத்தில் இருக்கும் அமெரிக்கா, கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.4 சதவிகிதம் அள விற்கு செலவைக் குறைத்திருந்தாலும், தற்போதும்கூட 2-ஆவது இடத்திலுள்ள சீனாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக மான தொகையை சுமார் 60 லட்சம் கோடி  ரூபாயை 2021-ஆம் ஆண்டில் ராணுவத்திற்கு செலவிட்டுள்ளது. நான்காவது மற்றும் 5-ஆவது இடங்களை முறையே பிரிட்டனும், ரஷ்யாவும் பிடித் துள்ளன. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செல வினங்களில் 68 சதவிகிதத்தை அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் மேற்கொள்கின்றன என்று ‘சர்வதேச அமைதி ஆய்வு மையம்’ தெரிவித்துள்ளது.