states

சிலிண்டர் விலையை உயர்த்தியது மோடி அரசு!

மேலும் ரூ. 50 

புதுதில்லி, ஜூலை 6 - 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு  உபயோக சமையல் எரிவாயு சிலிண்ட ரின் விலையை நரேந்திர மோடி அரசு மேலும் 50 ரூபாய் உயர்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை 6 முதல் 1068 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 12 மாதங் களில் மட்டும் வீட்டு உபயோக சமை யல் எரிவாயு விலையை, மோடி அரசு சிலிண்டர் ஒன்றுக்கு 253 ரூபாய் உயர்த்தி சாதனை படைத்துள்ளது. கடந்த 2021 ஜூலையில் வீட்டு உப யோக சிலிண்டரின் விலை 850 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. இதனை 2021  ஆகஸ்டில் 875 ரூபாய் 50 காசுகளா கவும், செப்டம்பரில் 900 ரூபாய் 50 காசு களாகவும், அக்டோபர் முதல் மார்ச் 2022 வரை 915 ரூபாய் 50 காசுகளாக வும், ஏப்ரலில் 965 ரூபாய் 50 காசு களாகவும் அதிகரித்த மோடி அரசு,  மே 7-ஆம் தேதி மேலும் 50 ரூபாயை  உயர்த்தியது. இதன்மூலம் வர லாற்றில் முதன்முறையாக மோடி ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயைத் தாண்டி, 1,015 ரூபாய் 50 காசு களானது. அத்துடன் நிற்காமல் அந்த  மாதத்திலேயே மே 19-ஆம் தேதி மேலும் 3 ரூபாய் விலையை உயர்த்தி யது. இதனால், சிலிண்டர் விலை 1,018  ரூபாய் 50 காசுகளாக இருந்துவந்தது.

இந்நிலையில்தான் புதனன்று (ஜூலை 6) மேலும் 50 ரூபாய் விலை யை உயர்த்தி, சிலிண்டர் 1068 ரூபாய்  50 காசுகள் என்ற உச்சத்திற்கு கொண்டு  சென்றுள்ளது.  இந்தப் புதிய விலை அறிவிப்பு மூலம் 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு  உபயோக சமையல் எரிவாயு சிலிண்ட ரின் விலை தில்லியில் 1052 ரூபாய் 50  காசுகள், சென்னையில் 1068 ரூபாய் 50 காசுகள், மும்பையில் 1,002 ரூபாய் 50 காசுகள், கொல்கத்தாவில் 1079 ரூபாய் என்ற அளவில் உயர்வைச் சந்தித்துள்ளன. 5 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையிலும் 18 ரூபாய் உயர்த்தியுள்ளது. கடந்த 17 மாதங்களில் 368 ரூபாயும், கடந்த ஓராண்டில் 253 ரூபாயும், 4 மாதங்களுக்குள் மட்டும் 103 ரூபாய் காசுகளும் சிலிண்டர் விலை யை மோடி அரசு உயர்த்தியுள்ளது. இது இந்திய ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் பலத்த அடியாக அமைந்துள்ளது. 

“சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதிச் செலவு, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படை யிலேயே பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்த்தப்படுகின்றன. அதையும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்ட மைப்புதான் செய்கின்றன. ஒன்றிய அரசுக்கு இதில் எந்த பங்கும் இல்லை” என்று மோடி அரசு கூறி னாலும், அதில் உண்மையில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

சர்வதேசச் சந்தையில் எல்பிஜி விலை அதிகமாக இருந்த போதும், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்ற நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ர வரி மாதங்களில் ஒரு பைசா  கூட எரிவாயு விலை உயர்த்தப்பட வில்லை. பெட்ரோல், டீசல் விலை களும் உயர்த்தப்படவில்லை. ஒவ் வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் இதுதான் நடக்கிறது. இவை தற்செயலானதில்லை என்று  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச் சாட்டுக்களை கூறி வருகின்றன. ஆனால், அதுபற்றி நரேந்திர மோடி அரசு பதிலளிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாகவே மோடி அரசு இல்லாமல் செய்து விட்டது. 2021-22 நிதியாண்டில் ஒன்றிய பாஜக  அரசு ரூ. 37 ஆயிரத்து 256 கோடியே  21 லட்சத்தை சமையல் எரிவாயு  மற்றும் இயற்கை எரிவாயு மானி யத்திற்காக ஒதுக்கியிருந்தது. ஆனால், கடந்த 2021-22 நிதியாண் டின் முதல் காலாண்டில் வெறும் 1,900 கோடி ரூபாயை மட்டுமே மானி யத்திற்காக செலவழித்தது.  பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 8  கோடி பேருக்கு மானியம் அறிவிக்கப் பட்டாலும், விலை உயர்வு காரண மாக அவர்களிலும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஒருதட வைக்குப் பிறகு சிலிண்டர்கள் நிரப்பவில்லை. இவர்கள் தவிர்த்து, எஞ்சியுள்ள சுமார் 16 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு எரிவாயு  மானியமே இல்லை என்றே கூறி விட்டது. இதனால் அந்த 16 கோடி குடும்பங்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.  இந்நிலையில், மேலும் மேலும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை, நடுத்தரக் குடும்பங் கள் மீது மோடி அரசு மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது.
 

 

;