states

இரண்டாவது முறையாக கேஸ் விலை உயர்வு!

புதுதில்லி, மே 19 - சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை (LPG Gas Cylinder) 12 நாள் இடைவெளியில் இரண்டாவது முறையாக மோடி அரசு உயர்த்தியுள்ளது. கடந்த மே 7 அன்று 14.2 கிலோ  கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்  ஒன்றுக்கு 50 ரூபாய் விலை உயர்த்தப் பட்டது. இதன்மூலம் வரலாற்றில் முதன் முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டி, ஆயி ரத்து 15 ரூபாய் 50 காசுகளாகஅதிகரித்தது. இந்நிலையில், வியாழனன்று சிலிண்டர்  ஒன்றுக்கு மேலும் 3 ரூபாய் விலை உயர்த்தப் பட்டுள்ளது. இதன்மூலம் சமையல் எரி வாயு சிலிண்டர் விலை, ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது.  இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் சிலிண்டருக்கு 103 ரூபாயும், கடந்த  12 மாதங்களில் 193 ரூபாயும், கடந்த 17 மாதங்களில் 318 ரூபாயும் மோடி அரசால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2021 ஜனவரியில் கூட வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 710 ரூபாயாக இருந்தது.

இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 2021 அக்டோபர் 6-ஆம் தேதி 915 ரூபாய் 50 காசுகள் என்ற அளவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர்,  2022 மார்ச் 22 அன்று 50 ரூபாய் உயர்த்தப் படவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 965 ரூபாய் 50 காசுகளாக அதி கரித்தது. அதன்பின்னர் மே 7-ஆம் தேதி  50 ரூபாயும், மே 19 அன்று 3 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் தற்போது, சிலிண்டர் ஒன்றின் விலை ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளை எட்டியுள்ளது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த மே 1 அன்று ஒரே நாளில் 102 ரூபாய் 50 காசுகள் விலை உயர்த்தப்பட்டது.

ஒரு சிலிண்டர் 2 ஆயி ரத்து 499 ரூபாய் என்று உயர்ந்தது. இந்நிலை யில், மே 19 அன்று மேலும் 8 ரூபாய் உயர்த்தப் பட்டு உள்ளது. தற்போது வணிகப் பயன் பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை  2 ஆயி ரத்து 507 ரூபாயை எட்டியிருக்கிறது. “சர்வதேசச் சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதிச் செலவு, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல்,  சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்த்தப்படுகின்றன.

அதையும் எண் ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புதான் செய்கின்றன. ஒன்றிய அரசுக்கு இதில் எந்த  பங்கும் இல்லை” என்று மோடி அரசு தொட ர்ந்து ஒரு பொய்யைக் கூறி வருகிறது. சர்வதேசச் சந்தையில் எல்பிஜி விலை  அதிகமாக இருந்த போதும், உத்தரப் பிர தேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்ற நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு  பைசா கூட எரிவாயு விலை உயர்த்தப்பட வில்லை. பெட்ரோல், டீசல் விலைகளும் உயர்த்தப்படவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போதும் இதுதான் நடக்கிறது. இவை தற்செயலானதா என்று எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்புகின்றன. ஆனால், அவற்று க்குப் பதில் இல்லை. அதுமட்டுமல்ல, மோடி அரசு கடந்த 2 ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்ட ருக்கான மானியத்தையே ஏறக்குறைய ஒழித்தே கட்டிவிட்டது. இதுபற்றியும் வாய் திறப்பதில்லை.

 2021-22 நிதியாண்டில் ஒன்றிய பாஜக அரசு ரூ. 37 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சத்தை சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு மானியத்திற்காக ஒதுக்கி யிருந்தது. ஆனால், கடந்த 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 1,900 கோடி ரூபாயை மட்டுமே மானியத்திற்காக செலவளித்தது.  பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டப் பயனாளிகள் 8 கோடி பேருக்கு மட்டுமே பெயரளவில் கடந்தாண்டு மானியம்  வழங்கப்பட்டது. ஆனால், விலை உயர்வு  காரணமாக அவர்களிலும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஒருதடவை க்குப் பிறகு சிலிண்டர்கள் வாங்கவில்லை. இவர்கள் தவிர்த்து, எஞ்சியுள்ள சுமார் 16 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோ ருக்கு எரிவாயு மானியமே முற்றிலு மாகவே நிறுத்தப்பட்டு விட்டது. சந்தை  விலைக்கும், மானிய சிலிண்டர் விலைக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவ தாக கூறி மோடி அரசு இவ்வாறு செய்தது. ஆனால், தற்போது மானியத்தையும் ஒழித்து விட்டு விலைகளையும் அடுத்தடுத்து உயர்த்தி, ஏழை, நடுத்தரக் குடும்பங்களை தொடர்ந்து வதைத்து வருகிறது.

;