states

ராகுல் விவகாரத்தில் மோடியின் முயற்சி தோல்வி: கே.எஸ் அழகிரி விமர்சனம்

சிதம்பரம், ஆக. 8- நாடாளுமன்றத்துக்குள் ராகுல்  காந்தியை நுழைய விடாமலும், பேச விடாமலும் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் கே.எஸ்.அழகிரி விமர்சித் துள்ளார். சிதம்பரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட, கே.எஸ் அழகிரி, உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனைக்கு தடை விதித்ததுக் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதா வது, ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந் திருக்கிறார். ஆயிரம் கோடி கைகள்  மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதைபோல மோடியும், மற்றவர்களும் சேர்ந்து  மிகவும் கீழ்த்தரமான காரணங்களை கூறி அவரை நாடாளுமன்றத்துக்கு நுழைய விடாமலும், பேச விடாம லும் செய்ய வேண்டும் என்று செய் தார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது. இந்தி யாவின் பாரம்பரியமிக்க நீதிமன்றம் அதை முறியடித்துள்ளது. மேலும்,உச்சநீதிமன்ற நீதிபதி தெளிவாக கூறியிருக்கிறார். இதை  ஒரு குற்றம் என்று கீழமை நீதி மன்றம் கருதி இருந்தால் தண்டனை கொடுக்கலாம். ஆனால் மிகச் சரியாக 2 ஆண்டுகள் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு நாள் குறைத் துக் கொடுத்திருந்தால் கூட பதவி  பறிப்பு இருக்காது என்று கூறியி ருக்கிறார். இதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருமே இதன் மூலம் இந்தியாவில் நீதி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள். அதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். மேலும், மோடி சொல்லி இருக் கிறார் எதிர்க்கட்சிகள் நல்லது செய்ய மறுக்கிறார்கள். எங்களை யும் செய்ய விடுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். மோடி நடத்து வது கூட்டணி ஆட்சி அல்ல. தன் னாட்சி. பண மதிப்பிழப்பை  மோடி செய்தார். அதனால் நாட்டில் ஒருவ ருக்கு கூட பலன் இல்லை. விவசாயி களுக்கு இரண்டு மடங்கு லாபம் தருவேன் என்று சொன்னார். ஆனால்  விவசாயமே விழுந்து விட்டது. இரண்டு கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார். ஆனால் இருந்த வேலையும் போய்விட்டது.