states

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க மாநில அரசு அனுமதி

சென்னை, ஜூலை 23- சென்னையில் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற் காக, அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகா ரிகள், வணிக வரித்துறை அதிகாரி கள் மற்றும் சென்னை மாநகராட்சி  அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து வருமான  வரித்துறை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி  முக்கிய ஆவணங்களை கைப்பற்றி னர். 2017 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச  ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவ ணங்களை கைப்பற்றினர். பின்னர்  இந்த வழக்கு 2018 ஆம் ஆண்டு  சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த  வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது. இந்நிலையில், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேரி டம் விசாரணை நடத்துவதற்கு அனு மதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு  சிபிஐ கடிதம் எழுதியது. இதைய டுத்து, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளி டம் விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்த ராஜேந்தி ரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேரிடம் விசா ரணை நடத்த உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் குட்கா வழக்கு  மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள் ளது.