விழுப்புரம், ஜூலை 4- மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வாய்த்த விவகாரம் தொடர்பாக ஜூலை 7 ஆம் தேதி 2 வது கட்டமாக விசாரணை மேற்கொள்ளப் படும் என கோட்டாட்சியர் தெரிவித் துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் பட்டியலினத்தவரை அனுமதிக்கவில்லை. மேலும், இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் போக்கும் வலுத்து வந்தது. ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும் மக்கள் மீது ஒரு பிரிவினர் தாக்கு தல் நடத்தினர். இரு பிரிவு மக்களிடம் அமைதியை ஏற்படுத்தி தலித் மக்களை கோவிலுக்குள் அனு மதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் அனைத் துக் கட்சித் தலைவர்களும் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால், தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில் ஒரு பிரிவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் ஜூன் 7ஆம் தேதி கோவிலுக்கு சீல் வைக்கப் பட்டது. இதை எதிர்த்தும், கோயிலை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தர விடக் கோரியும் விழுப்புரம் மாவட்டம், கரிய பாளையத்தை சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
மனுவில், கோயிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை எனவும் தீண்டாமை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் பிரச்சனை ஏற்பட்டு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்தது. அதன் அடிப்படையில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.கோயிலை நிர்வகிப்பதற்கு அறநிலையத்துறை தக்கார் ஒருவரை நியமித்துள்ளது. ஆனால் அவர் இன்னும் பொறுப்பேற்க முடியாமல் உள்ளது. எனவே இது குறித்து முழுமையான விசாரணை நடந்து கொண்டிருப்பதால் தற்போது கோயிலை திறக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணை நடந்து வருவதால் கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தான் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே கோயில் திறக்கும் விவகாரத்தில் அறநிலையத்துறையை மனுதாரர் அணுகலாம் என தெரிவித்தனர். மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை நிலவுவதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர் விண்ணப் பத்தை சட்டப்படி பரிசீலிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இந்நிலையில் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த விவகாரம் தொடர்பாக ஜூலை 7 ஆம் தேதி 2 ம் கட்ட விசாரணை மேற் கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு இரு பிரிவினருக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.