states

தேசம் காக்கும் கூட்டணி

இந்தியா... இந்தியா... இந்தியா!
தேசம் காக்கும் கூட்டணி !- ஜெய
பேரிகை இசைப் பாட்டணி!
ஆள்பவர் அதிர்ந்திடும் வேட்டணி!
சனாதனப் பேயை ஓட்டுநீ!
இந்தியா... இந்தியா... இந்தியா!        (இந்தியா)

            
மனு அதர்மமே தர்மமாய்
மாற்றிய ஹிட்லரின் வாரிசே!
குடைசரியுதுன் அரியணை
விடை கொடுக்கிறோம் மோடியே!
இஸ்லாமிய சொந்தங்களை 
இம்சிக்கும் திரிசூலம்!
சதிமாதாஎன... பெண்குலத்தை... 
மறுபடி மாற்றும் காலம்!
காவிக் கும்பலால் ஆவி அழிவதோ?
காக்க வருது பார் இந்தியா அதோ?    (இந்தியா)

விடுதலைச் சமர் நாட்களில்
வெள்ளையனுக்கு சாமரம்
வீசிய துரோகிகள் வாரிசு
செய்வதெல்லாம் வெறும் சாகசம்!
உருப்படியா ..... என்ன செஞ்சான்.... 
மறுபடி கேட்கிறான் ஓட்டு!
கலவரத்தை... விதைப்பவனை... 
ஆட்சியை விட்டு ஓட்டு!
வெல்லப் போகுது இந்தியா அணி!
விட்டுத் தொலையது பிஜேபி சனி!    (இந்தியா)
                

மக்களைக் கூறு போட்டவன்
ஒற்றுமை வேஷம் கட்டினான்!
தேர்தல் பத்திர ஊழலில்
 கையும் களவுமாய் சிக்கினான்!
அதானியின்...கப்பலிலே... 
ஏற்றினான் தேச கெளரவம்!
பொதுத்துறையின்... கழுத்தறுத்தான்... 
பத்தாண்டு ஆட்சி லட்சணம்!
வேத காலத்து மாட்டுக் காரனா
வேலையில்லாத இளைஞன் ஆவதா?    
                    (இந்தியா)