ஹைதராபாத், மே 8- தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 26). தலித் வகுப்பைச் சேர்ந்தவர். அதே மாவட்டம் ஹனபூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் அஷ்ரின் சுல்தானா. இவர்கள் இருவரும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இருதரப்பிலுமே எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகராஜூம், சுல்தானாவும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நாகராஜூ அங்குள்ள கார் ஷோரூம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, நாகராஜூ, தனது மனைவி சுல்தானாவுடன் கடந்த புதன்கிழ மை இரவு ஹைதராபாத் நகரப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார். சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் இவர்கள் வந்துகொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, நாகராஜை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூர மாகத் தாக்கியது. சுல்தானாவின் சகோதரர் சையது மொபின் மற்றும் அவரது நண்பர் மசூத் அகமது உள்ளிட்டோர்தான் இந்த தாக்கு தலை நடத்தியுள்ளனர்.
நாகராஜூவை அவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள னர். உடனிருந்த சுல்தானா தனது கண வரின் உயிரைக் காக்க பலவாறாக போராடி யும் முடியவில்லை. சம்பவம் நடந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அவர்களிடம் கண வரை காப்பாற்றுமாறு அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியுள்ளார். ஆனால், தாக்கு தலை செல்போனில் வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டிய கூட்டத்தினர், ஒருவர் கூட கொலையைத் தடுக்க முன்வரவில்லை. ஒருகட்டத்தில் கொலையாளிகளில் ஒருவன் சுல்தானாவையும் தாக்குவதற்கு முயன்றபோதுதான், அந்த பகுதி மக்கள் கையில் இருந்த ஹெல்மெட் உள்ளிட்ட வற்றை கொண்டு கொலையாளியைத் தாக்கி மடக்கிப் பிடித்து, காவல்துறையினரிடமும் ஒப்படைத்துள்ளனர். எனினும் நாகராஜூ வைக் காப்பாற்ற முடியவில்லை.
தனது கண்முன்பே கணவனை பறிகொ டுத்த சுல்தானா கதறித் துடித்த சம்பவம், தெலுங்கானா மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையமும் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையிலேயே, நாகராஜூ படு கொலையை பாஜக-வினர் மதப்பிரச்சனை யாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள் ளார். சரோர் நகரில் நடந்த ஆணவ கொலை யை நாங்கள் கண்டிக்கிறோம். பெண் விருப்ப ப்பட்ட திருமணம் செய்ய முடிவெடுத்துள் ளார். பெண்ணின் கணவரை கொலை செய்ய பெண்ணின் சகோதரனுக்கு எந்த உரிமையும் இல்லை. அரசியலமைப்புச் சட்டப்படி இது குற்றச் சம்பவம். இஸ்லாமிய மதப்படி இது மோசமான குற்றமாகும். இந்த கொலை காரர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல் படமாட்டோம். ஆனால், இந்த சம்பவத்திற்கு திடீரென வேறு நிறம் கொடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.