states

ஏப்.16 மதுரையில் உள்ளூர் விடுமுறை

மதுரை, ஏப்.12- மதுரை மாநகரில் சனிக்கிழமையன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கவிருப்பதால், அன்றைய தினம்  உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக் கப்படுகிறது.  மேலும் சனிக்கிழமையன்று மாவட்டத்தில் உள்ள கருவூ லங்களும், சார்நிலை கருவூலங்களும், வங்கிகளும் மற்றும் பொது மக்கள் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.