states

அக்னிபாத் திட்டத்தை திரும்பப்பெற மாட்டோம்

புதுதில்லி, ஜூன் 19- இந்திய ராணுவத்தை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாற்றும் அக்னி பாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அக்னி  பாத் திட்டத்தை கிழித்தெறிய வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டம் திரும்பப் பெறப் படாது” என ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டி னன்ட் ஜெனரல் அனில் பூரி ஞாயி றன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில்பூரி மேலும் கூறியிருப்பதாவது:- அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டால் இவர்கள் இந்தத் திட்டத்தில சேர  முடியாது. ஆட்சேர்ப்பின் போது திட்ட த்திற்கு எதிராகப் போராடவில்லை என உறுதிமொழிக் கடிதம் பெறப்படும். இந்தக் கடிதம் காவல்துறையின் விசார ணைக்கு உட்படுத்தப்படும் என்றார். அக்னிபாத் திட்டத்தின் முதல் தொகுப்பில் சேருவதற்கான பதிவு  ஜூன் 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பயிற்சி தொடங்கும் என ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா தெரிவித்துள்ளார். நவம்பர் 21-ஆம் தேதி முதல்,  கடற்படை ‘அக்னிபாத் பயிற்சி’ ஒடி சாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா பயிற்சி நிலையத்தில் தொடங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக துணை அட்மிரல் ஜெனரல் தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தையே கைவிட வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் அக்னிபாத் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்: என்கிறார் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி.