சென்னை, மே 29 - சொத்து வரி உயர்வில் மக்களின் கோரிக்கைகளை கவன த்தில் கொள்ள வேண்டுமெனவும், ஆண்டுக்கு 6 விழுக்காடு சொத்து வரி உயர்வு என்பதை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது: தமிழக அரசு சமீபத்தில் அறி வித்துள்ள சொத்துவரி உயர்வு என்பது, சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் கடுமையாக பாதிக்கக் கூடிய தாகும். அதாவது, சொத்துவரி உயர்வு என்பது 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டிடங் களுக்கு 25 விழுக்காடும், 601-1200 சதுர அடி வரை பரப்புள்ள கட்டி டங்களுக்கு 50 விழுக்காடும், 1201-1800 சதுர அடி பரப்புள்ள கட்டி டங்களுக்கு 75 விழுக்காடும், 1800 சதுர அடி பரப்புக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 100 விழுக்கடும் வரி வசூல் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா பெருந் தொற்றாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யிலிருந்தும் மீண்டு வரமுடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர்.
மேலும், ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு உள்ளிட்டவற்றின் விலை யை உயர்த்திக் கொண்டு வருவ தாலும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். இது தவிர இந்த குறுகிய காலத்தில் பலர் வேலை யின்றியும், ஏற்கனவே பெற்று வந்த வருமானத்தைவிட குறை வாகவும் பெற்று வாழ்க்கை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படு கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வு என்பது அவர்களை கடுமையாக பாதிக் கும். உள்ளாட்சி அமைப்புகளில், ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசின் உத்தரவு அடிப்படை யில்தான் இந்த உயர்வு என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, இந்த சொத்து வரி உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். தமிழக அரசின் ஆணை யின்படி சொத்துவரி செலுத்து வோரின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் சொத்து வரி செலுத்துவோர் வரி உயர்வுக்கு தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துள்ளார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளா ட்சி அமைப்புகளில் இந்த ஆட்சேப ணைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மீண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தின் அடிப்படையில் புதிய சொத்து வரி தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை சிறிதும் கவனத்தில் கொள் ளாமல் மீண்டும் அதே வரியை தீர்மானித்திருப்பது மக்களின் உணர்வுகளை அரசு செவி சாய்க்கவில்லை என்ற நிலையை உருவாக்கி விடும்.
ஆண்டுக்கு 6 விழுக்காடு வரி உயர்வு
மேற்கண்ட வரி உயர்வு மட்டு மின்றி, ஒவ்வொரு ஆண்டும் 6 விழுக்காடு சொத்து வரி உயர்த்தப்பட வேண்டுமெனவும் அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை செயல் படுத்தினால் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் 6 விழுக்காடு வரி உயர்வு ஏற்பட்டு 10 ஆண்டுகளில் நூறு விழுக்காடு சொத்து வரி உயர்வு ஏற்படும். இதன் காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் மிகப்பெரும் வரிச்சு மைக்கு ஆளாக்கப்பட வேண்டிய நிலைமை உருவாகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் 6 விழுக்காடு வரி உயர்வு என்பதை முழுமையாக கைவிட வேண்டு மென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.