நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, ஏஎன்ஐ ஆகிய மத்திய அமைப்பு கள் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங் களை குறிவைத்து பல்வேறு சோதனை களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியின் ஆளும் கட்சி எம்எல்ஏவான மாகந்தி கோபிநாத்துடன் தொடர்புடைய பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்க ளில் வருமானவரித்துறை அதிகாரிகள் வியாழனன்று சோதனை மேற்கொண்டனர்.