மாட்டின் சிறுநீருக்குள்ள
மதிப்பு கூட
நாட்டின் சிறுபான்மைக்கு
இல்லையா?
குனிய குனியக்
குட்டிக்கொண் டிருக்கிறார்
பணியப் பணிய
படுகொலை செய்கிறார்
பலங்கொண்டு பாபர்
பள்ளியை இடித்தார்கள்
புலம் பெயரச் சி ஏ ஏ
புதுச்சட்டம் தொடுத்தார்கள்
குஜராத்தில் முஸ்லிம்கள்
கொத்தாகக் கொலையானார்
பாதிக்கப் பட்டோரே
கைதாகிச் சிறையானார்
காஷ்மீர் சிறப்புரிமை
கயமையாய்ப் பறித்தார்கள்
கூசாமல் யூனியன்
டெரிடெரியாய்ப் பிரித்தார்கள்
மாட்டுக் கறிவைத்து
இருந்ததாய் முதியவரைக்
காட்டுத் தனமாய்
அடித்தே கொன்றார்கள்
கோயில் அருகில்
குல்லா அணிந்தோர் கடை
கூடாது என்று
கோடு கிழித்தார்கள்
பாங்கின் ஒலி இம்சைப்
படுத்துவதாய்க் குறைசொல்லி
ஆங்காங்கே சென்று
அராஜகம் செய்தார்கள்
பள்ளி வாசலுக்குள்
சிவலிங்கம் வைத்தார்கள்
நல்லிணக்கம் கெடுக்க
நரித்தனம் புரிந்தார்கள்
முஸ்லிம் பெண்களுக்குக்
கல்வியை மறுக்க
முக்காட்டுப் பிரச்னையை
மூட்டு கின்றார்கள்
இவர்கள்
நாட்டில் பற்று வைப்பவர்கள் அல்லர்
நாட்டைப் பற்ற வைப்பவர்கள்
மானின் உடம்பை
இறுக்கி நெரிக்கும்
மலைப்பாம்பு - முசல்
மானின் கழுத்தை
இறுக்கி நெரிக்கிறது
மதவெறிப் பாம்பு
நிறங்களின் கூட்டுறவால்
வானவில் ஓரழகு
மலர்களின் கூட்டுறவால்
மலர் மாலை ஓரழகு
பறவைகள் கூட்டுறவால்
வேடந்தாங்கல் ஓரழகு
வேற்றுமையில் ஒற்றுமையே
ஒன்றியத்தின் பேரழகு
- வல்லம் தாஜுபால்