புதுதில்லி, மே 5 - பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடு களின் தரவரிசை பட்டியலில் இந்தியா மிகமோச மான இடத்தில் இருப்பதாக ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (Reporters Without Borders - RSF)அமைப்பின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசைப் பட்டியலை ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா மிகமோச மான வகையில் 150-ஆவது இடத்திற்கு போயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச பத்திரிகை யாளர் தினமான மே 3 ஆம் தேதியன்று, ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதை ‘எல்லைகளற்ற செய்தியாளர் கள்’ அமைப்பு வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டுகூட இந்தப் பட்டியலில் இந்தியா 142-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், ஒரே ஆண்டில் 8 இடங்கள் கீழிறங்கியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு இதே பட்டியலில் இந்தியா 133-ஆவது இடத்தில் இருந்தது. அதன்படி பார்த்தால், கடந்த 5 ஆண்டுகளில் 17 இடங்கள் கீழிறங்கியுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் கூட 30 இடங்கள் முன்னேறி 76-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கை கூட இந்தியாவை விடவும் 4 இடங்கள் முன்னேறி 146-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் இந்த நாடுகளை விடவும் மோசமான நிலைக்குப் போனதற்கு, இந்து தேசியவாத அடிப்படை யிலான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் அதி கரித்து வருவதே காரணம் என்று ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. “இந்து தேசியவாதிகளால் பத்திரிகை யாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். இந்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைக் கும் பத்திரிகையாளர்கள், சமூக வலைதளங்களி லும் நேரடியாகவும் இழிவுபடுத்தி மிரட்டப்படு கின்றனர்” என்று அந்த அமைப்பு தனது ஆய்வறிக் கையில் குறிப்பிட்டுள்ளது. “இந்தியாவில் பத்திரி கையாளர்கள் மீதான தாக்குதல்கள், மிரட்டல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.” எனவும் ‘எல்லைகளற்ற செய்தி யாளர்கள்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவைக் காட்டிலும் மோசமான வகையில், பாகிஸ்தான் 157-ஆவது இடத்திலும், வங்கதேசம் 162 ஆவது இடத்திலும், மியான்மா் 176-ஆவது இடத்திலும் உள்ளன. பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் முதலிடத்தில் நார்வே-யும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. ஸ்வீடன், எஸ்டோ னியா, பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங் களில் உள்ளன. வல்லரசு நாடுகளான பிரிட்டன் 24-ஆவது இடத்திலும் பிரான்ஸ் 26-ஆவது இடத்திலும் அமெரிக்கா 42-ஆவது இடத்திலும் உள்ளன. ரஷ்யா 155-ஆவது இடத்திலும், சீனா 175-ஆவது இடத்திலும் வைக்கப்பட்டுள்ளன.