states

img

மீன்வளத் துறையிலிருந்து நலவாரியத்தை தனியாக பிரிக்க மீனவர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 22 - மீன்வளத் துறையிலிருக்கும் நலவாரியத்தை பிரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகத்தை சந்தித்து சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், கூட்ட மைப்பின் செயல் தலைவர் எம்.கருணா மூர்த்தி, பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, பொருளாளர் எஸ்.ஜெய சங்கரன் உள்ளிட்டோர் மனு அளித் துள்ள பேசினர். அந்த மனுவில், நலவாரியத்தை துறையிலிருந்து பிரித்து தனி அலுவலகம் அலுவலர்களை கொண்டு செயல்பட வேண்டும். 55 வயதுக்கு மேற் பட்ட பெண், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் மீன்வர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் தர வேண்டும். இதர  நலவாரியங்களைப் போன்று பணப் பயன்களை வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலம் 45 நாட்க ளிலிருந்து 61 நாட்களாக அதிகரித்துள் ளது. அதற்கேற்ப நிவாரணத்தை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபா யாக உயர்த்த வேண்டும். இருப்பினும், முதலமைச்சர் அறிவித்தபடி 8 ஆயிரம் ரூபாயை முழுமையாக வழங்க வேண்டும். மீன்பிடியின் போது உயிரிழக்கும் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும் போது 25 லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். பணியின் போது  உயிரிழக்கும் மீனவர்களுக்கு நிவார ணம் வழங்க 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும். புயல் போன்ற இயற்கை பேரிட ரின் போது மீனவர்களை மீட்க கடற்கரை  மாவட்டங்களில் நவீன விசைப் படகுகளை நிறுத்த வேண்டும். கேரளத்தை போன்று கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க சென்னை, குமரி, ராமே ஸ்வரத்தில் ஹெலிகாப்டர்களை நிறுத்த வேண்டும். இலங்கை மற்றும் அண்டை நாடு களில் சிறையில் உள்ள மீனவர்களை யும், படகுகளையும் ஒன்றிய அரசை வலியுறுத்தி மீட்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மீன்பிடிக்க பொது ஏலம் விடுவதை தவிர்த்து, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பாசி குத்தகை வழங்க வேண்டும். தேசிய மீனவர் சேமிப்பு நிவாரணத் திட்டத்தில் உள்நாட்டு மீன வர்களையும் சேர்க்க வேண்டும். நாட்டுப்படகுகளுக்கு 500 லிட்டர்  மண்ணெண்ணெய், டீசல், விசைப்படகு களுக்கு 3000 லிட்டர் டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டிருந்தன. மனுவைப் பெற்றுக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்திய கூடுதல் ஆணையர்  ஆறுமுகம், கோரிக்கைகள் தொடர்பாக  மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு  சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.