- நாமக்கல் போதிமலையில் 2 பழங்குடியினர் கிராமங்களில் சாலை அமைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை அமைப்பதால் வெட்டப்படும் மரங்களுக்கான இழப்பீட்டுத் தொகை யை வனத்துறைக்கு அரசு தர வேண்டும் என்றும் அரசு வெட்டும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயி ரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
- பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கரூரில் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் மே 13ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
- 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. 3,936 தேர்வு மையங்களில் 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
- செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கர்நாடகா மாநிலத்திலுள்ள சிவவர்மா காரந்த் பிலிகுலா உயிரியல் பூங்கா இடையேயான விலங்கு பரிமாற்ற திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
- சேதமடைந்த 10 ஆதி திராவிடர் பள்ளி மாணாக்கர் விடுதிகளுக்கு சுமார் 45 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும் என்று அத்துறைக் கான அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.
- சீனாவில் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி நடை பெறுவதாக இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- நூல் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை வகைகளின் விலையை 15 சதவீதம் அதி கரித்து விற்பனை செய்ய இருப்பதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
- கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.