states

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60ஆக நீட்டிப்பு

சென்னை, செப்.27- தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்க ளின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில், தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங் கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது  60ஆக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது பழைய முறைப்படி 58ஆக இருந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதும் 60ஆக உயர்த்தப்படுவதாகவும், புதிய நடைமுறை நடப்பு செப்டம்பர் மாதமே அமலுக்கு வருவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

;