states

பேரவையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை, ஏப்.12- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஈவிகேஎஸ் இளங்கோவன் முதன் முறையாக தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு புதனன்று (ஏப்.12) வருகை தந்தார். மருத்துவமனையில் கொரோனா  தொற்று மற்றும் இதய பாதிப்பிற்காக  தீவிர சிகிச்சை பிரிவில் 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில், முழுமையாக குணம் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த 6 ஆம் தேதி வீடு திரும்பினார். இந் நிலையில், ஈரோடு கிழக்கு  தொகுதியில் வெற்றி பெற்று, காங்கி ரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர் தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறை யாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், புதனன்று ஏப்ரல் 12 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறிது நேரம் அங்கிருந்த அவர், அவை நிகழ்வு களில் பங்கேற்காமல், வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்ட பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப் பட்டார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு  பேரவைக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோ வன் வருகைதந்தார்.