சென்னை,அக்.7- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும் முழுமையாக வழங்கிட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் முதல மைச்சருக்கு அனுப்பியுள்ள மனு விவரம் வருமாறு; சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற முடி யாத வகையில் விதிகள் உருவாக்கி யிருந்ததை தற்போது தளர்த்தி நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வந்திருப்பதற்கும் எமது சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரி விக்கின்றோம். எனினும், தற்போதும் பல்வேறு காரணங்களைக் காட்டி மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்க ளுக்கும் மேல் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாதபடி மறுக்கப் பட்டுள்ளதாக புகார்கள் வந்துள் ளன. குறிப்பாக குடும்ப தலைவிகளாக உள்ள மாற்றுத் திறனாளி பெண்கள் ஏற்கனவே பெற்று வரும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளியாக உள்ள குடும்பத்தலைவி என்ற பெண்ணை தவிர வேறு பெண் நபர் இல்லாத சூழலில் இக்குடும்பங்கள் முற்றிலு மாக மகளிர் உரிமைத்தொகை பெற முடியாமல் புறக்கணிக்கப்படு கின்றன. இது, எந்த விதத்திலும் நியாயமில்லை என எமது சங்கம் கருதுகிறது. மேலும், மாற்றுத் திறனாளி பயன்படுத்தும் வாகனம் உள்ளிட்ட உடமைகள் வைத்திருப்ப தைக்கூட காரணம் காட்டி ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மறுக்கப் பட்டுள்ளது.
கர்நாடகா, மே.வங்கத்தில் இது போன்று இல்லை
கர்நாடகாவில் இதே போன்று குடும்பத்தலைவிகளுக்கு தற்போது அமல்படுத்துப்பட்டு வரும் ரூ.2,000 “கிரகலட்சுமி” திட்டத்திலும், மே.வங்கத்தில் 25முதல் 60 வயது டைய பட்டியலின பெண்களுக்கு ரூ.1000/-மும் மற்ற பெண்களுக்கு ரூ.500 வழங்கும் “லட்சுமி பந்தர்” திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற முடியாதவாறு தடுக்க வில்லை. எனவே, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளியாக உள்ள குடும்பத் தலைவிகளுக்கும், அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட மாண்புமிகு தமிழக முதல மைச்சர் உத்தரவிட எமது சங்கம் கோருகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.