states

திருத்தணிக்கு மாற்றுப்பாதை

சந்திரன்(திமுக): திருத்தணி கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்து கொடுக்கப்படுமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு: ரோப்கார் வசதிக்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்று தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கை கொடுத்துள்ளது. எனவே, மலை யேறுவதற்கும் பேருந்து போக்கு வரத்திற்கும் மாற்றுப்பாதை அமைத்துக் கொடுக்கப்படும். இரா. மாணிக்கம்(திமுக) குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு குட முழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா? அமைச்சர் சேகர்பாபு: தண்ணீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒன்றேகால் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்ததும் குடமுழுக்கு நடத்தப்படும். ரோப்கார் அமைக்கும் பணிகள் முடிவ டைந்துவிட்டது. வருகிற 16 ஆம் தேதி வெள்ளோட்டம் நடக்கிறது. அதன்பிறகு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.