சிலிண்டரம்மா சிலிண்டரம்மா! - விலை
எட்டாம கிட்டாம எகிறுதம்மா!
பெட்ரோலு பெரியம்மா!-போறா
சந்திராயன் ராக்கெட்டோடு சரிசமமா!
மோடியைநீ எலக்சனிலே
மூட்டை கட்டி அனுப்பிடம்மா!
(சிலிண்டரம்மா)
அம்பானிக்கு-மோடி
சகபாடிக்கு -அவன்
தொப்பைய ரொப்பிட பெட்ரோலம்மா!
தொப்பையிலே- பம்பு
கொழாய் வச்சு- அது
நமக்கு விநியோகம் எப்போ அம்மா?
ஒலகமெல்லாம் விலை நடக்குதம்மா!
உள்ளூரில் கேஸ் விலை பறக்குதம்மா!
(சிலிண்டரம்மா)
கப்பலிலே - அந்த
அதானிக்கு-அவன்
கப்பல் விளிம்பு வரை காசு கொட்டும்!
வக்கு இல்ல -ஒரு
சிலிண்டருக்கு! - நம்ம
கேஸ் அடுப்பு கூட கண்ணீர் சொட்டும்!
இலவச சிலிண்டராம்! காலியாச்சி!
கொதிக்கிறா கோபமா முத்துப்பேச்சி!
(சிலிண்டரம்மா)
மலை அளவில் -விலை
ஏத்திவச்சி - சின்ன
மண்ணாங்கட்டி அளவில் விலை குறைப்பு !
ஏமாளியா?- நாம
கோமாளியா?-வரும்
எலக்சனில் வேகாது மோடிபருப்பு!
காலி சிலிண்டர் இந்த சங்கி மோடி!- பொய்
வாக்குறுதி தருவதில் கில்லாடி!
(சிலிண்டரம்மா)