தில்லியில் கடந்த சில நாட்களாக குக்கி - ஸோ (பழங்குடி மக்கள்) கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், மணிப்பூர் அரசுக்கும் (குடியரசுத் தலை வர் கட்டுப்பாடு), ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தை வியாழனன்று இறுதி முடிவு எட்டப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,”பொது போக்கு வரத்துக்கும், அத்தியவாசியப் பொருட் கள் மாநிலத்துக்குள் வந்து செல்வதற்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 2-ஐ திறந்து விட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குக்கி - ஸோ கவுன்சிலும், பாதுகாப்புப் படையின ரும் முழு ஒத்துழைப்பு தர முன்வந்துள் ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது. மணிப்பூர் - நாகாலாந்து இடையே மிக முக்கியமான இணைப்பாக உள்ள என்எச்-2 தேசிய நெடுஞ்சாலை மணிப்பூர் வன்முறை தொடங்கிய பின்னர், அதா வது 2023 மே மாதம் முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.