states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வணிக சிலிண்டர் விலை உயர்வு

சென்னை, அக். 1- வணிக பயன்பாட்டிற் கான எரிவாயு சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது. மாதம்தோறும் ஒன்றாம் தேதி எரிவாயு சிலிண் ண்டர்களின் விலையை எண் ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் மாத இறுதியில் வீட்டு உப யோக யன்பாட்டுக்கான சிலி ண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தொட ர்ந்து அடுத்த இரண்டு நாட் களில் செப்டம்பர் 1ஆம்  தேதி வணிக பயன்பாட்டிற் கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோ பர் 1ஆம் தேதி வணிகப் பயன் பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள் ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன் பாட்டு சிலிண்டரின் விலை  203 ரூபாய் உயர்த்தப்பட்டு ள்ளது. செப்டம்பர் 30 வரை 1,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 1 முதல் 1,898 ரூபாய்க்கு விற்பனை செய் யப்படவுள்ளது. அதே போல், 5 கிலோ சிலிண்டரின் விலையும் 49 ரூபாய் உயர்த்தப்பட்டு 544 ரூபாய்  50 பைசாவுக்கு விற்பனை யாகவுள்ளன.

ரயில் நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு 

சென்னை, அக்.1  சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப் பட்டது.இந்நிலையில் இந்த ரயிலுக்காக வழக்க மாக செல்லும் வைகை, பாண்டியன், பொதிகை உள் ளிட்ட அதிவிரைவு ரயில் களின் நேரத்தை தெற்கு ரயில்வே  மாற்றியமைத்துள் ளது. இதற்கு ரயில் பயணி ள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

7 ஆயிரத்தை  நெருங்கும் டெங்கு

முன்னப்பொழுதும் இல்லாத வகை யில் குறுகிய காலத்தில் டெங்கு காய்ச்சலால் பீகார் மாநிலம் உரு குலைந்துள்ளது. இந்த ஆண்டில் மாநி லம் முழுவதும் 6,421 பேர் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  செப்டம்பரில் மட்டும் 6,146 பேர் டெங்கு  காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்  பர் 17 அன்று வரை 7 பேர் உயிரிழந்துள்ள னர். பாட்னா, முங்கர், பாகல்பூர், சரண் ஆகிய பகுதிகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மைய பகுதிகளாக உள்ளன.

விண்ணுக்கு  உயர்ந்த விமான கட்டணம்

மிலாடி நபி, சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி என  தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர் களுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியிலான போக்குவரத்து அதிகரித்துள்ளது. ரயில், பேருந்து முன்பதிவுகள் முடிந்திருக்க, முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு நெருக்கடியும் நேர்ந்திருக்கிறது. சூழலை உத்தேசித்து ஆம்னி பேருந்து கட்டணங்கள் வெகுவாய் உயர்த்தப்பட்டுள்ளன. தரை மார்க்கத்தி லான கட்டணங்கள் மட்டுமன்றி வான் மார்க்கத்திலான விமான கட்டணங்களும் வானுக்கு உயர்ந்துள்ளன. ரூ.5  ஆயிரத்துக்கு இருந்த விமான கட்டணம் ரூ.20 ஆயி ரத்தை தாண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக திருச்சி - சென்னை விமான கட்டணம் ரூ21,526 ஆகவும், தூத்துக்குடி - சென்னை ரூ18,365; மதுரை - சென்னை  கட்டணம் ரூ19,000 என விமான கட்டணங்கள் உயர்வு  கண்டுள்ளன. கோவை - சென்னை கட்டணம் மட்டும் ரூ7,789 என இறங்கிய நிலையில் உள்ளது.

சிறு சேமிப்புத் திட்ட வட்டி விகிதம் உயர்வு

சென்னை,அக்.1- சிறு சேமிப்புத் திட்டங்க ளுக்கான வட்டி விகிதம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.   இதன் கீழ், ரெக்கரிங் டொபாசிட் (ஆர்.டி)  5 வருட தொடர் வைப்புத் தொகை யில் கணக்கு வைத்திருப்ப வர்களுக்கு தற்போது 6.5 சதவீத வட்டி வழங்கப் படுகிறது. இது  6.7 சதவீத மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், சுகன்யா சம்ரிதி திட்டம், மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்ரா போன்றவற்றில் எந்த வகை யான மாற்றமும் இல்லை. 

பரந்தூர் வந்த ஐ.ஐ.டி குழுவினர்:  கிராம மக்கள் சாலை மறியல்

சென்னை, அக். 1- காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2ஆவது சர்வதேச விமான  நிலையம் அமைக்கப்பட உள்ளது.  இந்த விமான நிலையத்துக்காக  சுமார் 4,500 ஏக்கர் நிலம் கைய கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும்விமான நிலைய திட்  டத்துக்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலை யில், பரந்தூர் விமான நிலையம் தொடர் பாக அரசு தரப்பில் அமைக்கப் பட்டுள்ள போராசிரியர் மச்சநாதன்  தலைமையிலான குழு ஞாயிற்றுக்  கிழமை ஆய்வு செய்ய வருவதாக தக வல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் விதமாக 13 கிராமங்க ளைச் சேர்ந்த மக்கள்சாலை மறிய லில் ஈடுபட்டனர். அப்போதுகாவல் துறையினருக்கும் போராட்டக்காரர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, 300 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். 

யுஜிசி நெட் தேர்வு டிச. 6இல் தொடக்கம்

சென்னை, அக். 1- பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட் தேர்வு, தேசிய தேர்வு முகமையால் நடத்தப் படும் தகுதித் தேர்வாகும். இந்த தேர்வின் மூலம் தேசிய அளவிலான பல்கலைக் கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் நடை பெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறி விப்பை தேசிய தேர்வு முகமை வெளி யிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வுக்கு 30.9.2023 முதல் 28.10.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளி யாகியுள்ளது. மேலும் நெட் தேர்வானது 6.12.2023 முதல் 22.12.2023 வரை கணினி வழி நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத தகுதியுள்ள வர்கள் https://ugcnet.ntaonline.in/  என்ற இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள லாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறி வித்துள்ளது. தேர்வுக்காக விண்ணப்பித் தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வரும் டிசம்பர் மாதம் https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழைக்கு வாய்ப்பு

 சென்னை, அக்,1- தமிழகத்தில் சில வாரங்களாக பகலில் கடும் வெயிலும் இரவு கன மழையும் பெய்து  வருகிறது. எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் அடிக்கும் என்று தெரியாத சூழல்தான் மக்கள் மத்தியில் நிலவி வரு கிறது.  மாறி வரும் வானிலை மாற்றம் காரண மாக பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக கொசுப் புழுக்கள் உற்பத்தி அதிகரித்ததால், டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்துள்ளது. இந்த நிலை யில் சில வாரங்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறி வுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்களன்று (அக்,2)  தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், அக். 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.