states

8 முக்கியத் துறைகளின் உற்பத்தி மார்ச்சில் 4.3 சதவிகிதமாக சரிவு!

புதுதில்லி, மே 3- அடிப்படைத் துறைகள் எனப்  படும், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி  வளா்ச்சி விகிதம் மார்ச் மாதத்தில்  4.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வர்த்த கம் மற்றும் தொழிற்துறை அமைச்ச கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2022 பிப்ரவரி யில் 6 சதவிகிதமாக அதிகரித்தி ருந்தது.  இந்த நிலையில், மார்ச் மாதத் தில் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 4.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதற்கு, நிலக்கரி மற்றும் கச்சா  எண்ணெய் துறையின் செயல்பாடு மந்தநிலையில் இருந்ததே முக்கி யக் காரணம் ஆகும். மார்ச் மாதத்தில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய்த் துறை யின் உற்பத்தி முறையே 0.1 சத விகிதம் மற்றும் 3.4 சதவிகிதம் என்ற அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. மேலும், இயற்கை எரிவாயு உற்பத்தி வளர்ச்சி 12.3 சதவிகி தத்தில் இருந்து 7.6 சதவிகிதமாக வும், உருக்கு 31.5 சதவிகிதத்தில் இருந்து 3.7 சதவிகிதமாகவும், சிமெண்ட் 40.6 சதவிகிதத்தில் இருந்து 8.8 சதவிகிதமாகவும், மின்சாரம் 22.5 சதவிகிதத்தில் இருந்து 4.9 சதவிகிதமாகவும் குறைந்துள்ளன. எனினும், சுத்திகரிப்பு பொருட்  கள் மற்றும் உரத் துறையின் உற்பத்தி முறையே 6.2 சதவிகிதம் மற்றும் 15.3 சதவிகிதம் என்ற அள வில் வளர்ச்சியை தக்கவைத்துள் ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்  கப்பட்டுள்ளது.