states

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை.மே 21-  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் திங்கட் கிழமை  (மே 22)  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  வானிலைமையம் விடுத்துள்ள வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். மே 23, 24, 25 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.