states

குழந்தை மற்றும் தாய் உடல் நலனை பாதுகாக்கிறது தாய்ப்பால்

சென்னை, ஜூலை 17- இந்திய தாய்பாலூட்டும் நடை முறையில் சமீபத்திய மருத்துவ தகவ ல்களை புதுப்பித்துக்கொள்ளும் கருத்தரங்கு சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. ஹேப்பி மாம்ஸ் ஹெல்த்கேர் சர்வீசு டன் இணைந்து சிம்ஸ் மருத்துவ மனை நடத்திய இந்த கருத்தரங்கை மாநில அரசின் சமூகப் பாது காப்புத்துறையின் இயக்குனர் வளர்மதி தொடங்கி வைத்தார். தென்னிந்தியா முழுவதிலுமிருந்து இத்துறையில் பிரபலமான 100 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பேசிய  டாக்டர். ஜெயஸ்ரீ ஜெய கிருஷ்ணன் (மருத்துவ இயன்முறை சிகிச்சை நிபுணர்) –“தாய்ப்பாலூட்டல் உயிர்களை காப்பது மட்டுமின்றி, தாய்ப்பாலூட்டும் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கி யத்தையும் நலவாழ்வையும் மேம்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்றார்.  தாய்ப்பாலூட்டல் மீது உடல்நல பராமரிப்பு சேவையில் ஈடுபட்டுள்ள மரு த்துவ வல்லுநர்களுக்கு இதுகுறித்த புரிதல்  அவசியம் என்பதால் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படு கின்றன என்றும் அவர் கூறினார்.  மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை மருத்துவப் பிரிவின் முது நிலை நிபுணர் டாக்டர் பத்மப்பிரியா,  துணைத்தலைவர் டாக்டர். ராஜூ சிவசாமி உள்பட பலர்  இதில் கலந்துகொண்டு பேசினர்.