பாஜக ஆளும் ஹரியானா முதல் வராக இருப்பவர் மனோகர் லால் கட்டார். இவர் சண்டிக ருக்கு அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபொழுது, பெண் ஒருவர், “வேலை வாய்ப்பை உரு வாக்க தங்கள் பகுதி யில் தொழிற்சாலை கொண்டுவர வேண் டும்” என வாய்மொழி கோரிக்கை விடுத்தார். ஆனால் இதற்கு கிண்டலுடன் பதிலளித்த முதல்வர் மனோகர் லால் கட்டார், “அடுத்த முறை நிலவுக்குச் செல்லும் சந்திரயான்- 4 விண்கலத்தில் உங்களையும் சேர்த்து அனுப்புவோம்” எனக் கூறினார். முதல்வரின் இந்த பதிலை எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்த படி நின்றார். ஆனால் பாஜகவினர் அனை வரும் சத்தமாக சிரித்து கோரிக்கை விடுத்த பெண்ணை மேலும் கிண்டல் செய்யும் நோக்கில் சீண்டினர். ஹரியானா முதல்வ ரின் இந்த அலட்சிய பேச்சிற்கு காங்கி ரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளது.