states

வராக் கடன் வேறு... வஜாக் கடன் வேறா?

வங்கிகளின் வராக்கடன் (Write off)  பல லட்சம் கோடிகள் என்ற செய்திகள் வரும் போதெல்லாம் வராக்கடன் என்பது வஜா கடன் (Waive off) அல்ல என்று  நிதியமைச்சர்  பொருளாதார வகுப்பு எடுப்  பது வழக்கம்.  ரைட் ஆஃப் என்பது குறிப்பிட்ட காலத்திற்  குள் வசூல் ஆகாத கடன்களுக்கு செய்யப் படும் ஒதுக்கீடுதான்;  வராக்கடன் என்று பட்டி யல் இடப்பட்டாலும் அக்கடன்களை வசூல்  செய்ய முயற்சிகள் தொடரும்; ஆகவே அதற்கு தள்ளுபடி என்று அர்த்தம்  அல்ல என்று விளக்கம் தருவார்.  கடந்த ஐந்து நிதியாண்டுகளில் வராக்  கடனில் வசூல் எவ்வளவு... வஜா எவ்வ ளவு... என்ற கணக்கை  மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு அளித்த பதிலில் நிதியமைச்சகம் தந்துள் ளது. (இந்து பிசினஸ் லைன் - 14.12.2022).

*    2017 -18 இல் வராக் கடன் ரூ.1,61, 328  கோடிகள். வராக்கடன் வசூல் ரூ. 12,881  கோடிகள்.

 *    2018-19 இல் வராக் கடன் ரூ.2,36,265 கோடிகள். வராக்கடன் வசூல் ரூ.2505 கோடிகள்.

 *    2019 - 20 இல் வராக் கடன் ரூ. 2,34, 170  கோடிகள். வராக்கடன் வசூல் ரூ.30016 கோடிகள்.

 *    2020 -21 இல் வராக் கடன் ரூ.2,02,781 கோடிகள். வராக்கடன் வசூல் ரூ.30,104 கோடிகள்.  

*    2021 -22 இல் வராக் கடன் ரூ.1,74,966 கோடிகள். வராக்கடன் வசூல் ரூ.33,534 கோடிகள். 

2017- 22 வரையிலான ஐந்தாண்டுகளில் மொத்த வராக்கடன் ரூ.10,09,510 கோடிகள். அதே காலத்தில் வசூலான வராக்கடன் ரூ. 1,09,040 கோடிகள். “வரா” வேறு “வஜா” வேறு விளக்கம் தரும் நிதியமைச்சர் அவர்  களே, வராக்கடன், அதில் வசூல் ஆன கடன் இரண்டுக்குமான இடைவெளி  ரூ.9,00,470 கோடிகள் இருக்கிறதே!  ஐந்து ஆண்டுகளில் 11 சதவீதம் மட்டுமே வசூல் ஆகியுள்ளது. எந்த ஆண்டிலும் 20 சதவீதத்தை அது தாண்டவே இல்லை.  2018 - 19 இல் மட்டும் பார்த்தால் வசூல் வெறும் ஒன்றரை சதவீதம் மட்டுமே. அதிக பட்ச வசூல் இந்த ஐந்தாண்டுகளில் 2021 - 22 இல் ஆகியுள்ள 19 சதவீதம் என்பதே.  “வரா” என்றால் பெரும்பாலும் “வஜா” என்பதுதான் உண்மை. அதுவே நடப்பு. வகுப்பில் அதையும் சேர்த்து விளக்கமா  சொல்லுங்க நிதியமைச்சரே! -

க.சுவாமிநாதன்