சென்னை,ஜூன் 7- “தமிழக அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு என தவறான தகவல்களை வெளியிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை சுய விளம்பரம் தேடி வருகிறார்” என்று பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் சாடியுள்ளார். தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்ட கத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும், தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததா லும் தமிழக அரசுக்கு ரூ.77 கோடி நட்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்க சந்திப்பில் பதில் அளித்த பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர், “தற் போது வரை ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயார் செய்யப்பட வில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை சுய விளம்பரம் தேடி வருகிறார். ரூ.77 கோடி இழப்பு என தவறான தகவல்களை தெரிவிக் கிறார்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், “32 வகையான ஊட்டச்சத்து கள் நிறைந்த ஹெல்த் மிக்ஸ் தயார் செய்து தர முடியுமா என ஆவின் நிர்வாத் திடம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கேட்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் அதற்கான முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் டெண்டர் வாங்கப்படவில்லை” என்றார்.