states

பாஜகவுடன் கூட்டணி முறிவு ஆந்திராவில் செய்தியாளர்களைக் கையெடுத்துக் கும்பிட்ட எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமையன்று காலை ஆந்திர மாநிலம் விஜய வாடாவிற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து  விமானம் மூலம் விஜயவாடா சென்ற அவர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று  அம்மனை தரிசனம் செய்தார். இதன்பின், எடப்பாடி பழனிசாமியை செய்தியாளர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சாமி தரிசனம் செய்ய  மட்டுமே வந்திருக்கிறேன் என்றார்.  தொடர்ந்து, பாஜகவுட னான கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி  எழுப்பினர். அதற்கு கையை எடுத்து கும்பிட்டு ‘Please... Please’  என்று கூறினார். மேலும், கூட்டணி முறிவு குறித்து  தற்போது எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள் ளார்.