பாலக்காடு,ஆக.17- மது அருந்துவதில் கேரளா பின்தங்கி யுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் மது நுகர்வு 12.4 சதவிகித மாக குறைந்துள்ளது. இது 14.6 சதவிகிதம் என்கிற தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. குடிகாரர்களின் விகிதத்தில் கேர ளம் 21ஆவது இடத்தில் உள்ளது. முத லிடத்தில் சத்தீஸ்கர் - 35.6 சதவிகிதம். இது கேர ளாவை விட மூன்று மடங்கு அதிகம். அதைத் தொடர்ந்து திரிபுரா 34.7சதவிகிதமாகவும் பஞ்சாப் 28.5 சதவிகிதமாக உள்ளன. கேரளாவில் 309 பெப்கோ-நுகர்வோர் மையங்கள் மட்டுமே உள்ளன. கர்நாடகா வில் 3,980 விற்பனை நிலையங்களும், தமிழ கத்தில் 4,829 விற்பனை நிலையங்களும் உள்ளன. 2012-13இல் கேரளத்தில் 244.33 லட்சம் வெளிநாட்டு மதுபான பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022- 23இல் இது 19.99 லட்சமாக குறைந்துள்ளது. கலால் வரி வருவாய் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. கலால் வருவாயில் கேரளம் 23ஆவது இடத்தில் உள்ளது. மதுபானங்கள் மீதான விற்பனை வரியையும் சேர்த்து, கடந்த ஆண்டு மொத்த வருவாயில் 13.4 சதவிகிதம் மட்டுமே மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. கேரளத்தில் இதர போதைப்பொருள் பயன்பாடும் குறைந்துள்ளது. கஞ்சா பயன்படுத்து பவர்களின் தேசிய சராசரி 1.2 சதவிகிதம். கேரளத்தில் அது 0.1 சதவிகிதம் மட்டுமே ஆகும்.