வெப்பநிலை குறைந்து வரு வதும், மித மான காற்றோட்டமும், அண்டை மாநிலமான பஞ் சாப் மற்றும் ஹரியானா விவ சாயிகள் வைக்கோல்களை அதிகளவில் எரிப்பதாலும் நாட் டின் தலைநகர் தில்லியில் தொடர்ந்து 6-ஆவது நாளாக காற்றின் தரம் மிக மோச மான அளவில் குறைந்துள் ளது. தற்போதைய நிலை யில் காற்றின் தரம் 460 புள்ளி களை தொட்டுள்ளதால் வாக னப் போக்குவரத்து உள் ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காற்று மாசு மாறுபாடு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி வேலை நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்க 6 முதல் 12-ஆம் வகுப்பு களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது தில்லி கல்வித்துறை அமைச்சகம். சுவாச நோய்களுக்கு வாய்ப்பு தில்லியின் மாசுபட்ட காற்று உடலின் சுவாச மண்ட லத்திற்குள் ஆழமாகச் சென்று சுவாச நோய் பிரச்ச னைகளை ஏற்படுத்தக்கூடிய மிக நுண்துகள்கள் கண்ட றியப்பட்டுள்ளது. உலக சுகா தார அமைப்பு பரிந்துரைக் கப்பட்ட நுண்துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் என்ற நிலையில், தில்லியில் அதை விட பல இடங்களில் 7 முதல் 8 மடங்கு அதிகமாக உள் ளது. இந்த நுண்ணிய துகள் களால் சுவாச நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என தில்லி மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.