நாமக்கல், ஜுலை 9- அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியா வசிய உணவுப்பொருட்களுக்கு மோடி தலை மையிலான ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரிவிதித்தி ருப்பதை அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கடு மையாக கண்டித்துள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜுலை 8,9 இரண்டு நாட்கள் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட், மாநில பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளா ளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் எம்.சின்னதுரை எம்எல்ஏ, அ.பழநிசாமி, அ.து.கோதண்டம், மாநில துணை தலைவர்கள் ஜி. கணபதி, பி. வசந்தாமணி, எஸ்.பூங்கோதை, நாமக்கல் மாவட்ட தலைவர் சி.துரைசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.பி.சபாபதி உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒன்றிய அரசு அத்தியாவசிய உணவுப் பண்டங்களான அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அதி கரித்துள்ளது. இதனால் அனைத்துப்பகுதி மக்களும் உணவு பொருட்கள் வாங்க முடி யாமல் தவிக்கிறார்கள். பொதுவிநியோக திட் டத்தில் வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் வெளி சந்தையில் வாங்கும் உணவு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும்.
தெளிப்பு முறை கூடாது
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்தியினருக்கு ஒத்துப் போகாத விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களை பழி வாங்கும் உள் நோக்கில் ”தெளிப்பு முறை” சாகுபடி செய்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காமல் பட்டினியில் தள்ளு வதை அனுமதிக்க முடியாது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு வழக்கத்திற்கு மாறாக முன் கூட்டியே மே மாதத்திலேயே காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இச்சூழலில் தெளிப்பு சாகுபடி என்பது விவசாய தொழிலா ளர்களை பழிவாங்கும் நோக்கத்திற்கு தமிழ் நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் துணை போவதை கைவிட வேண்டும்.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்
தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் நகர்ப்புற பேரூராட்சி, ந கராட்சிகளில், மாநகராட்சிகளில் அடங்கி யுள்ள கிராமப்புறங்களில் ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டம் போல் வேலை கொடுக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடியது. அதன் காரணமாக 2021-2022 நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் குறைந்த அளவிலான எண்ணிக்கையில்கூட தொழிலாளர்களுக்கு வேலை தரப்பட வில்லை. ஆகவே அனைத்து நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளிலும் வேலை தரும் வகை யில் ரூ.1000ம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைவருக்கும் வேலை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
நீதிமன்ற சாக்கும் - புல்டோசரும்
குடியிருக்க வேறு வழியில்லாமல் அரசுப் புறம்போக்கு நிலங்களில் எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். அத்தகைய குடியிருப்பை வரன் முறை செய்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அரசு, ஆட்சேபகரமான நீர்நிலைப் புறம் போக்குகளில் குடியிருப்போரை அப்புறப் படுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்த ரவை சாக்காக வைத்துக் கொண்டு அரசு எந்தி ரங்கள், குடிசைகளை குறிவைத்து புல்டோசர் கொண்டு இடித்து தள்ளுவதை ஏற்க முடி யாது. இதனால் சொந்த பூமியில் அகதிகளாய் குடும்பத்துடன் மக்கள் பரிதவித்து வருகிறார் கள். அதைப்போலவே அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போரின் வீடுகளுக்கு தாறுமாறாக வாடகையை உயர்த்தியதோடு, லட்சக்கணக்கான ரூபாய் வாடகை பாக்கி செலுத்த நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். நீர்நிலை புறம்போக்கு வெளியில் குடியிருப்ப வர்கள் வரன்முறை செய்து பட்டா வழங்கவும், அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போ ருக்கு குறைந்த விலையில் தவணை முறையில் பணம் செலுத்தவும், நீதிமன்ற தலையீட்டை தடுக்கவும், கோவில் நிலங்களை அரசு கைய கப்படுத்தி பட்டா வழங்கவும் அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதேபோன்று வீட்டு மனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு சிறப்பு திட்டங்கள் அறிவித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்தி பட்டா வழங்குக!
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தி பட்டா வழங்கும் நடைமுறை கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதியும் வேறு திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டுள் ளது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் இருந்தும் நாடோடிகளாய் வாழும் வீடற்றவர்களுக்கு நிலம் கிரயம் பெற்று வீட்டு மனை ஒப்படைப்பு செய்யும் அரசின் நடவ டிக்கைகள் நின்று போய் உள்ளது. இதனை கவ னத்தில் கொண்டு உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
வேலை நாட்களை அதிகரித்திடுக!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.281 தினக்கூலி வழங்கப்படு கிறது. இந்த கூலியும் பெரும்பான்மையான ஊராட்சிகளில் முழுமையாக வழங்கப்படு வதில்லை. அன்றாட செலவினங்களுக்கு வழியில்லா மல் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரி வித்தது போல 50 நாட்கள் வேலையை கூடுத லாக்கி 150 நாட்கள் வேலையும், தற்போது உள்ள தினக்கூலியிலிருந்து ரூ100 உயர்த்தி உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண் டும்.
தாலிக்கு தங்கம் திட்டம்
தாலிக்கு தங்கம் தரும் திட்டம் தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் ரூ.50 ஆயிரம் தாலிக்கு தங்கமும் தமிழ்நாடு அரசு கொடுத்து வந்ததை நிறுத்தியது மிகுந்த கவலையளிக்கிறது. நிர்வாக குறைபாட்டை சீர்செய்து மீண்டும் தாலிக்கு தங்கம் கொடுக் கும் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.