states

பாடலாசிரியர்கள், கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தோழர்களே!
நடக்கவுள்ள கட்சியின் மாநில மற்றும் அகில இந்திய மாநாட்டு பிரச்சாரங்களையொட்டி ஒரு புதிய 
பாடல்கள் தொகுப்பு உருவாக உள்ளது. 
எனவே , சமகால அரசியல் குறித்தும் வர்க்க அணி திரட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் களத்தில் முன்னெடுக்க வேண்டிய முதன்மையான அரசியல் செயல்பாடுகள் பற்றியும் பாடல்களை எழுதித் தருமாறு நமது கவிஞர்களை, பாடல் ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறோம்..
எழுதிய பாடல்களை அக்டோபர் 30க்குள், 
“கலையரங்கம்”
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ் மாநிலக் குழு அலுவலகம்
14, வைத்திய ராமன் தெரு, தியாகராய நகர், 
சென்னை - 600 017 என்கிற முகவரிக்கு அனுப்பி 
வைக்கவும்.
அல்லது  pralayans@rediffmail.com என்கிற மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்கலாம்.