states

சிறுகச் சிறுக சேர்த்து வைத்த தங்கம் பள்ளி, கல்லூரி கட்டணத்திற்காக வித்தாச்சு!

கல்வி அடிப்படை உரிமை என ஆட்சியாளர்கள் காது கிழியப் பேசினாலும், எதார்த்தத்தில் தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் கட்டணம் எளிய மக்களின் தலையில் பாராங்கற்கள் வைத்த சுமைபோலத்தான் இருக்கிறது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு துவக்கப் பட்ட நிலையில், கோவையில் கடந்த பத்து நாட்களில் சுமார் 50 கோடி ரூபாய்க்கு அதிக மாக பழைய தங்க ஆபரணங்கள் விற்கப் பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை; ஆசிரியர்கள் பற்றாக் குறை எனப் பலகுறைகள் கண்கூடாக தெரி கிறது. இதேபோன்று அரசு கலைக்கல்லூரி கள் தேவைக்கேற்ப இல்லை என்பதால் குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால், பெற்றோர்கள் கடன் வாங்கியோ, இருப்பதை விற்றோ தனியார் பள்ளி, கல்லூரி களில் மாணவர்களை சேர்க்கின்றனர். இவ்வ ளவுதான் கட்டணம் என அரசு நிர்ணயித்தி ருந்தாலும், பில் போட்டு ஒரு கட்டணம், பில்  இல்லாமல் ஒரு கட்டணம் என தனியார் கல்வி  நிறுவனங்கள், வசூல் வேட்டை அல்லது கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை அர சும் அறியும். கடந்த இரண்டு ஆண்டும் கொரோனா தொற்று -

ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டு வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து, உயிர் மிஞ்சுமா என்கிற நிலையில் கூட  தனியார் கல்வி நிறுவனங்கள் கப்பம் வசூ லிப்பதை நிறுத்தவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று பர வல் விகிதம் அடங்கியுள்ளது. மீண்டு விடு வோம் என்கிற நம்பிக்கையில் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகிறபோது கல்வி ஆண்டு வந்துவிட்டது. வழக்கம்போல் தனி யார் பள்ளி, கல்லூரிகள் கட்டணக் கொள்ளை யை ஆரம்பித்துவிட்டன. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கல்விக்கூடங்களில் சேர்ப்பதற்கு பணத்தை திரட்ட பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக கோவை மாவட்ட மக்கள் மட்டும் கடந்த 10 நாட்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகைகளை விற்றுவிட்டதாக தங்க நகை தொழில்துறையினர் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர். சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு ஆசை ஆசை யாய் வாங்கிய ஆபரணங்களை கல்விக் கட்ட ணத்திற்காக அடகு வைத்தால் மட்டும் போதாது என்பதால் பொதுமக்கள் விற்று வருகின்றனர் என நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவல் களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயா ரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளி, கல்லூரி களில் மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் அந்த பணி கள் நடந்து வருகின்றன. ஆனால், கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பின் ஏற் பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி பெரும் பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதன்  காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக பெற்றோர் பலர் தாங்கள் சேமித்து வைத்த தங்க நகைகளை விற்று வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய்  மதிப்பிலான பழைய தங்க நகைகளை விற்  பனை செய்துள்ளனர். '

பள்ளி மற்றும் கல்லூரி களில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடை பெற்று வருவதால் எதிர்வரும் நாட்களிலும் கூடுதலாக பழைய தங்க நகைகள் விற்ப னைக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார். பழைய தங்க நகைகளை வாங்கி உருக்கி விலைக்கு விற்கும் பட்டறை உரிமையாளர் சித்திக் என்பவர் கூறுகையில், ஒருவர் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாவது திரட்ட வேண்டும் என்கிற நிலையில் வேறுவழி யில்லாமல் ஆபரணத்தை கொண்டு வரு கின்றனர். நகைகளை அப்படியே விற்றால் அழுக்கு உள்ளது; டச் குறைவாக உள்ளது என தள்ளுபடி செய்வார்கள். ஆகவே நகை களை உருக்கி தங்கத்தை மட்டும் தனியாக பிரித்து கட்டிகளாக கொடுத்தால் கூடுதல் விலைக்கு விற்க முடியும். கடந்த இரண்டு வார  காலமாக ஏராளமானோர் தங்க நகைகளை உருக்க என்னிடம் வருகின்றனர். கஷ்டப்பட்டு சேர்த்த நகைகளை பள்ளிக் கட்டணத்திற்காக விற்பதை பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கி றது, என்றார். நகையை உருக்கி விற்றால் காசு கிடைக்கும் என்கிற நிலையில் உள்ள தொழி லாளியே சங்கடப்படுகிறார்; அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒளிர்கிறது, மிளிர்கிறது என மிகைப்படுத்தாமல் அரசுக் கல்வி நிலை யங்களை மேம்படுத்த வேண்டும்; தேவைக்  கேற்ப கல்லூரிகளை திறக்க வேண்டும்; தனியார் கல்வி நிலைய கட்டண கொள்ளை யை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைத்து வர்க்க மக்களின் எதிர்பார்ப்பு!

;