states

img

தீக்கதிர் உலக செய்திகள்

காசாவில் 21 ஆயிரம்  குழந்தைகளை காணவில்லை 

கடந்த ஆண்டு  அக்டோபர் 7 அன்று காசா மீது இஸ்ரேல் போரைத் தொடங்கியதில் இருந்து 21,000 குழந் தைகள் வரை காணாமல் போயுள்ளதாக ‘சேவ் தி  சில்ரன்’ அமைப்பினர் தெரி வித்துள்ளனர். கிட்டத்தட்ட 4,000 குழந்தைகள் இடி பாடுகளுக்குள் புதைந்தி ருக்கலாம், 17,000 குழந்தை கள் அவர்களது குடும்பத்தை விட்டு பிரிந்து காணாமல் போய் இருக்கலாம் என ஐ.நா அவை மற்றும் ஹமாஸ் சுகாதார அமைச்சக தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட 37,626 பேரில் 40 சதவீதத்துக் கும் அதிகமானவர்கள் 18 வயதுக்கு குறைவான குழந்தை களாவர்.

மனித கேடய விவகாரம் : அமெ.அதிகாரி கருத்து

பாலஸ்தீன இளைஞரை மனிதக்கேடயமாக பயன்படுத்தியது குறித்து இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். இஸ்ரேல் ராணுவம் பாலஸ் தீனத்தின் மேற்கு கரையில் காயமுற்ற பாலஸ்தீன இளை ஞர் ஒருவரை கவச வாக னத்தின் முன்புறம் கட்டி  மனிதக்கேடயமாக பயன் படுத்தியது. இந்நிலையில், “அந்த காணொலியை நான் பார்த்தேன், அது அதிச்சியளித்தது, மனிதர்களை ஒருபோதும் கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் இஸ்ரேலின் இந்த சர்வதேச விதிமீறல் குற்றத்திற்கு அமெரிக்கா கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

;