- ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடை பெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. வெற்றி இலக்கான 160 ரன்னை 20 ஓவரில் எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 82 ரன்கள் அடித்தார்.
- சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல் தெரி வித்துள்ளார். நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திர ராயன்-3 விண்கலம் உரு வாக்கும் பணி நடை பெற்று வருகிறது.
- ஸ்பெயினில் நடை பெற்று வரும் 23 வயதிற்கு ட்பட்டோ ருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில், பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத், துருக்கியின் அகமத் துமனை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அமன் ஷெராவத் பெற்றுள்ளார்.