நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள் ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை வேகமாக சரி செய்ய வேண்டும்.
வெள்ளம் பாதித்து 6 நாட்களாகி யும் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு பால் உள்ளிட் டவை கிடைக்கவில்லை. நெல்லை நகரப் பகுதிக்குள் இந்த நிலைமை என்றால் கிராமங்களில் மக்களின் நிலை என்னவாக இருக்கும்?.
வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை இந்த மாவட்டங்கள் சந்தித்துள்ளன. ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை காயல் பட்டினத்தில் ஒரே நாளில் பெய்துள்ளது. தூத்துக்குடியில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இனி இது போன்ற நிலை ஏற்படாமல் அரசு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் மனநிலை யும் மாற வேண்டும்.
தமிழக அரசு தற்போது நிவார ணமாக ரூ. 2000 கோடி கேட்டுள்ளது. அதனை ஒன்றிய அரசு கொடுப்பதில் தவறில்லை. இது போன்ற கால கட்டம் அரசுக்கும் மிகப்பெரிய சவால் தான். எனினும் மீட்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாமக தலைவர்
அன்புமணி ராமதாஸ்